பக்கம்:கண்ணன் கருணை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21 காண்டீபன் ஞானியோ யோகியோ யாரறிவார் உன்னை? மாதவனை யாதவன் என்றே நினைக்கின்றேன் ஞாலத்தின் பிடி என்னை விடவில்லை பந்தங்களை அறுக்கத் தவமிருக்க நேரமில்லை கண்ணன் தனித்திருந்து தன்னை வருத்துவது தவமோ உலகத்துக்கு உதவாமல் ஓடி ஒதுங்கி வனத்திருந்து தேவரை வரம் கேட்பது தவமோ மனத்திலென்னை நினைத்திருப்பதே மாபெரும் தவம் சொல்லால் என் பெயரைச் சொல்லிச் சொல்லி ஒருமைப் பாட்டுடன் உருகுவது பெருந்தவம் செயலின் பயனைக் கருதாது நீ செய்யும் தொழில் அனைத்தும் தவமே போர்முனையில் பகைவரைக் கொல்லுவதும் தவமே என்னை நினைந்து ஓரடி எடுத்து வைத்தால் ஏழடி தொடர்ந்து வருவேன் கேளடா உன் குழப்பம் தீரச்சொல்வேன் துறவெண்பார் துவராடை தரிப்பார் துளப மணியணிந்து தோத்திரம் படிப்பார் தலங்களை வலம் வருவார் அது ஒரு துறவோ!பற்றறச் செய்யும் பணியெல்லாம் துறவே வரவு செலவு உபரி இழப்பு கூட்டல் கழித்தல் கணக்கில் நில்லாமல் தொழில் படுவதும் துறவெனக் கொள்க. உலகத் தோடு உழன்றாலும் சுழன்றாலும் ஓடும் புளியுமாக உலர்வதே துறவு பலனைக் கருதாமல் படுகின்ற பாடும் பந்தம் சொந்தம் அறுவதும் துறவே ஞானியினும் பெரிய துறவி இல்லை க.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/22&oldid=1363377" இலிருந்து மீள்விக்கப்பட்டது