பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

45



அவர் கூறிவந்த பல காரண்கள் பொருந்தாமல் இருந்தாலும், அதற்கான உள்நோக்கம் பற்றி அறிய முடியவில்லை. அந்த வீட்டில் நானிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. காரணம் என்மேல் அவருக்கு ஏற்பட்ட பொறாமை உணர்வுதான்.

அந்த வீட்டுக்காரர் புதிதாகக் கட்டிய அந்த வீட்டுக்கு, பலர் வந்து பார்த்துவிட்டுப் போனாலும், வரத் தயங்கினார்கள். வந்து குடியேறிவிட்டால் பெயர் பாழாகிவிடுமோ என்றும் பயந்தார்கள். காரணம்,

புதிய வீட்டைக் கட்டிவிட்டு, அதற்கொரு வாட்ச்மேனை வைத்தார் அவர். அந்த வாட்ச்மேனோ, வீட்டைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இரவில், குறைந்த வாடகையில், தவறுகள் நடப்பதற்கு உதவிக் கொண்டிருந்தார்.

சுற்றுப்புறமெல்லாம், அது ஒரு மாதிரிப்பட்ட வீடு என்ற புகழைப் பெற்றுவிட்டது. இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஏற்கனவே குடியிருந்த வீட்டில், அந்த வீட்டுக்காரர் தந்த பிடுங்கலால், வீட்டைக் காலி பண்ணுவதாகக் கூறிவிட்டு, நான்கு நாட்கள் தவணை கேட்டுவிட்டு அலைந்த போதுதான், இந்த வீடு எனக்குத் தென்பட்டது. நான்கே நாட்களில் குடிவந்துவிட்டேன். அக்கம் பக்கம் உள்ளவர்கள் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த போதுதான், விஷயம் புரிந்தது. என்னையும் ஒரு 'தொழில் செய்பவனாகத்தான் நினைத்தார்கள். பல நாட்கள் ஆன பிறகுதான், நிதானமாக உண்மை புரிந்தது.

பிறகு, அந்த வீட்டின் பழியைப் போக்க நான் பல முயற்சிகள் மேற்கொண்டேன். படித்தவர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் என்று பலரைத் தேடிப்பிடித்து, 8 குடும்பங்களைக் குடியமர்த்தினேன்.

அந்த வீட்டிற்கு ஒரு புதிய மரியாதை கிடைத்தது. அந்த வீட்டைப் பற்றிய எல்லாவற்றிற்கும் என்னிடம் வந்துதான் கேட்பார்கள். நானும் பொறுப்போடு கவனித்துக்