பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxv

இந்நூல் நடை வடசொற்கள் இடையிடையே விரவிச் செம்பாகமாக அமைந்திருக்கின்றது. அம்பிகையின் திருநாமங்களை மிகுதியாகப் பொருத்தி ஆசிரியர் பாடுகிறார். எளிய நடையில் பெரும்பாலும் ஆற்றொழுக்கே அமைந்து இயலுகின்றன செய்யுட்கள். எதுகை நயம் பொருந்திய பாடல்கள் சில உண்டு.

“மின்கொடி மென்கடிக் குங்கும தோயம்" (1)
"முப்புரை செப்புரை செய்யும் புணர்முலை" (5)
"சுந்தரி யந்தரி (5)
"வந்தரி சிந்துர வண்ணத்தினாள்" (8)
"வானவர் தானவ ரானவர்கள்" (14)
"அமையு மமையுறு தோளியர் மேல்லைத்த வாசை" (31)
"வண்டு கிண்டி " (76)
"விருந்தாக வேலை மருந்தான தைநல்கும்" (90)
"புண்ணிய ரெண்ணிலர்". (97)

ஒரு செய்யுளில் மடக்கு அமைந்துள்ளது :

"உடையாளை ஒல்குசெம்
பட்டுடை யாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர்
நெஞ்சடை யாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்
மான்இடை யாளைஇங் கென்னைஇனிப்
படையாளை உங்களை
யும்படை யாவண்ணம் பார்த்திருமே."


சின்னஞ்சிறிய, பென்னம் பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி, தங்கைச்சி, ஆத்தாள் என்ற வழக்குச் சொற்கள் இந்நூலில் வந்துள்ளன.

அன்போடு படிப்பவர் நெஞ்சில் அபிராமியின் திவ்வியத் திருஉருவம் தோற்றும்படியும், மேலும் மேலும் படிப்பாருக்குப் பக்தி நலம் பழுக்கும்படியும் செய்வது இந்நூல். அங்ஙனம் செய்வதற்குரிய சொல்நடையும்