பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
51


கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நன்றாகப் படித்தவரையே கலியாணம் செய்து கொள்வேன் என்று நான் சொன்னேன். சரி படித்தவரையே பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.’’ மறுபடியும் அவள் சிறிது சிரித்தாள். "அப்படியெல்லாம் நடந்தது.”
"அதற்கப்புறம் நீங்கள் கலியானம் செய்து கொண்டீர்களா?”
"ஆமாம்; இத்தனை போராட்டத்திற்குப் பிறகு அது முடிந்தது. என்னுடைய பெண்கள் படிப்பைப் பற்றி கவலைப்படவில்லை ; பி. ஏ. பட்டம் பெறக்கூட விரும்ப வில்லை. அதனாலே அவர்களைக் கலியாணம் செய்து கொடுத்தோம். எனக்கு நிறையப் பேரப்பிள்ளைகளும் பெண்களும் இருக்கிறார்கள். என் மகன் குமாருக்குப் படிப்பிலே அக்கறையிருந்தது. சமஸ்கிருதத்திலே பண்டிதனாவதற்கு அவன் விரும்பவில்லை. நான் எப்படி ஆசைப்பட்டேனோ அப்படி அவன் தேசத்திற்குப் பெரிய சேவை செய்ய ஆசைப்பட்டான். அதனால் அவன் எஞ்சினியர் ஆனான். ஐரோப்பாவிலே பயிற்சி பெற்றான். முதலில் எங்களுக்குக் கொஞ்சம் பயம். ஆனால் அவன் நல்ல பையன். இப்பொழுது லட்சுமிக்கும் அதே ஆசை.”
"அம்மணிப்பாட்டி, லட்சுமி பெரியவளான பிறகு என்ன செய்வாள்? அவள் நாட்டியகாரி ஆவாளா?”
அவள் நாட்டியம் ஆடுவாள் என்று நினைக்கிறேன். ஆனால் நாட்டியகாரி ஆகமாட்டாள். அவள் கல்லுரிக்குச் சென்று படிப்பாள். ஒருவேளை ஆசிரியை ஆகலாம்.”
"அல்லது அவள் கவியாகலாம்" என்று ஜூடி கூறினாள். ஏனெறால் லட்சுமி தானாகவே எழுதிய கவிதை