பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

சூடாக இருக்கும். அங்கே ஐஸ் பண்டங்கள் கிடையாது; ஆனால் சுவையான இளநீர் கிடைக்கும். அதிலுள்ள தேங்காய், மென்மையான ஜெல்லியைப் போன்றது. அந்த இளநீர்த் தேங்காய்களின் வெளிப்பகுதி மழமழப்பாகவும், பொன் பசுமை நிறத்தோடும் இருக்கும்; ஆங்கில நாட்டுத் தேங்காய் விளையாட்டுக்களில் கிடைக்கும் தேங்காய்களைப் போலக் கரடுமுரடாகவும் மாநிறமாகவும் இருப்புதில்லை. இந்திய மக்களும் ஆங்கில மக்களும் வேறுபட்டிருப்பதைப்போல இவை வேறுபட்டிருக்கும் - அதாவது வெளித் தோற்றத்திலே,

அவர்கள் உண்மையிலேயே மிகவும் வேறுபட்டவர்கள் என்று ஜூடி சில வேளைகளில் எண்ணுவாள். பள்ளிக்கூட வகுப்பிலே இருந்தவர்கள் பெரும்பாலும் இந்தியச் சிறுமிகளே;அவர்களுடன் பேசுவது அவளுக்குச் சுலபமாக இருக்கவில்லை. அவர்களிற் சிலருக்குச் சினிமா நட்சத்திரங்களைப் பற்றித்தான் ஆர்வம். இல்லாவிட்டால் ஜுடிக்குப் பிடித்தமில்லாத விஷயங்களிலே அவர்களுக்குப் பிடித்தமிருக்கும். சில வேளைகளில் அது குடும்பத்திலே நடைபெறும் கலியாண விஷயமாக இருக்கும். அதிலே பெரும் பகுதி ஜூடிக்கு மடமையாகத் தோன்றும். ஜாதகத்தைப் பற்றி எதற்காக இத்தனே ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்? ஜூடியின் அத்தை மார்கரட்டைப்போல் கலியாணம்செய்து கொள்வதைப் பற்றி இவர்கள் ஏன் தீர்மானம் செய்து கொள்ளக்ககூடாது? வேறு யாரும் குறுக்கிடாதவாறு ஏன் இவர்கள் காரியத்தை முடித்துக்கொள்ளக்கூடாது? அடுத்த வீட்டிலே கலியானம் நடைபெற்றபோது இரண்டு நாட்களுக்கு இரவெல்லாம் இரண்டு வாத்திய கோஷ்டிகள் முழங்கிக் கொண்டிருந்தன. அரையாண்டுப் பரீட்சைகள் நடக்கின்ற சமயத்திலே இப்படி!