பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

நடத்துவதற்கு மக்களுக்கு உதவி செய்யவேண்டும். சிறு கைத்தொழில்களால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் வழி செய்யவேண்டும்” என்று அவள் தாயார் விளக்கிக் கூறினாள். “கிராமங்களில் செய்த கம்பளங்களையும் திரைகளையும் துணிகளையும் நாம் வாங்குவது உனக்குத் தெரியுமல்லவா?” என்று அவன் கேட்டாள்.

"ஆமாம்” என்றாள் ஜூடி சிலசமயங்களில் அப்படி வாங்காமலிருந்தால் நல்லதென்று அவள் நினைப்பதுண்டு. ஏனென்றால் இங்கிலாந்திலும், சுவிட்லர்லாந்திலுமிருந்து வரும் அழகிய துணிகள் கடைகளிலே கிடைக்கின்றன; அவற்றைத் தன்னுடைய உடைகளுக்காக வாங்க அவள் விரும்பினாள்.

“இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் இந்திய அரசாங்கம் செய்ய முயலும் காரியங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் கருதுகிறேன். ஏழை மக்களின் நிலையைக் கொஞ்சம் உயர்த்த அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கினர்கள். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மக்களின் நிலை இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும். இந்தியாவுக்குக் கிடைக்கும் வரும்படியில் சிறிது பாகந்தான் பணக்காரர்களுக்குப் போகும்; ஏழைகளுக்கு அதிகம் கிடைக்கும். இதைத்தான் நேருவைப்போன்ற உண்மையான தேசத் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எப்பொழுதும் சில பேர் சுயநலக்காரர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.”

தாய் என்ன நினைக்கிறாள் என்பது தனக்குத் தெரிந்ததாக ஜூடி கருதினாள். தாங்கள் சுகமாக இருக்கும் வரையில் என்ன கடக்கின்றது என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களில் ஒன்றிரண்டு பேர்களுடன் அவள்