பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li தெய்வத்திறம் பேசும் பனுவல்களாக இருப்பதைக் காணலாம். தமிழருடைய வாழ்வு தெய்விக வாழ்வாக வளர்ந்து வந்ததையே இந்த இலக்கியங்கள் காட்டுகின்றன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்ற வேண்டுமானுல் அதற்கேற்ற பக்தியுளமுள்ள நிலமாகத்தானே தமிழ்நாடு இருந்திருக்க வேண்டும் ? தமிழ்ப் பாடல்களிலே கடவுளின் புகழைப் பல வகை யில் சொல்லும் உத்திகளைக் காணலாம். தனியாக வழங்கும் பாடல்களிலும், நூல்களிடையே உள்ள கவிகளிலும் புலவர் பெருமக்கள் தங்கள் கற்பனே வண்ணத்தால் மூர்த்திகளின் புகழை அழகாகக் கோலம் செய்திருக்கிருள்கள். அத்தகைய அழகிய பாடல்கள் சிலவற்றைச் சுவைத் துப்பார்த்த பிறகு, பிறரும் அந்த இன்பத்தை அடை யட்டும் என்ற கினேவினலே எழுதிய கட்டுரைகளே ஆலைக் கரும்பு என்னும் இக்தொகுதியில் உள்ளவை. கண்பதி, திருமால், உமாதேவியார், சிவபெருமான், கலே, மகள், புத்தர் ஆகியவர்களைப் பற்றிய பாடல்களே இதில் காணலாம். - - 21-10:54, கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/6&oldid=744425" இலிருந்து மீள்விக்கப்பட்டது