பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

த்தனையோ விஷயங்கள் ஜூடிக்கு விளங்குவது சிரமாக இருந்தன. பிராமணர்கள் அவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பழங்காலத்திலே அவர்கள் எல்லோரையும் அதிகாரம் செய்துகொண்டிருக்ததாகத் தோன்றுகிறது. அவர்கள் மிகுந்த துய்மையும் சீலமும் கொண்டிருந்ததால் சாதாரணமான வேலைகளையெல்லாம் அவர்களால் செய்ய முடியவில்லை. அப்படி வேலை செய்யும் தாழ்ந்த சாதி மக்களை அவர்கள் தொடக்ககூடமாட்டார்கள். அதனால் சமூகத்தின் அடி நிலையிலிருந்த ஹரிஜனங்கள் இப்பொழுது பிராமணர்களை விரும்பலில்லை. தங்கள் உரிமையைப் பெற அவர்கள் முயன்றனர்.

காக்காப்பூக்கொடிவேலிக்கு அப்புறத்தே உள்ள குடும்பத்தினரைப் பற்றி ஜூடி தன் தந்தையிடம் விசாரித்தாள். அவர்கள் பிராமணர்கள் என்று தந்தை தெரிவித்தார். கணவர் ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். இந்துக்கள் அல்லாத மற்றவர்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவார்களா என்பது குறித்து ஜூடியின் தங்தைக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

“அவர்கள் வைதிகமான பழக்கமுடையவர்களாகயிருந்ததால் அவர்கள் வீட்டிற்குள் நாம் செல்லுவதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு நாமெல்லாம் ஹரிஜனங்களைப் போலத்தான். நாம் உள்ளே நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று அவர்கள் நினைப்பார்கள்” ஜூடியின் தந்தை.

“அது ரொம்ப முட்டாள்தனம்” என்றாள் ஜூடி.

“சில வகைகளிலே நாம் சுத்தம் குறைந்தவர்கள். வெளியிலே போட்டுச் செல்லுகிற பாதரட்சைகளை வீட்டிற்குள்ளும்.