பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புத்த ஞாயிறு 12] இந்த கிலேயில், உலகம் முழுவதும் பகை மண்டுவ தன்றி அமைதிக்கு இடம் எது? அறியாமை இருள் படர்ந்து, தனக்கும் தெரியாமல், பிறர் கூறுவதைக் கேட்க வும் உணர்வின்றி, அடைத்துப் போன செவியோடு நடைப் பிணமாக வாழ்ந்தது உலகம்; வறண்டு போன பாலை கிலம் போல, அன்பும் அறிவும் இன்றிப் பாழாய்ப் போயிற்று. அப்போது ஒரு கதிரவன் உதித்தான். அறியாமை இருளைப் போக்க அறிவுக் கதிரை விரித்தான். பகையுணர்ச்சியை நீக்கத் தயாமூல தருமத்தைப் பரப்பின்ை. உயிர்கள் எல்லாம் உணர்வு பாழ் ஆகிப் பொருள்வழங்கு செவித்தொளை துார்ந்தறிவு இழந்த வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச் சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலேஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன நீயோ தோன்றினே! நின்அடி பணிந்தேன்!

  • (೨೧ಗಿGuಶಿಖ)

என்று அந்தக் கதிரவனப் போற்றிப் பணிந்தனர். அறிவுடை மக்கள். இருளும் பனியும் கலியக் கூம்பிக் குமைந்து மலர்ச்சியின்றி நின்ற தாமரை, செங்கதிரோன் கதிரைக் கண்டு இதழ்க் கதவக் திறந்து மணம் விரித்துத் தேன் பிலிற்றுகிறது போல, அந்தச் சூரியனைக் கண்டு அன் புக்கும் அறிவுக்கும் ஏங்கிப்போன் உள்ளங்கள் அலர்ந்தன. அவனே நாடி அவனுடைய தயா மூலதர்ம் ஒளியிலே இன்பத் தேனைப் பிலிற்றின. - - - ... . . . . . . . பிறருக்கு இரங்காமல் தன் நலமே பேணி வாழ்ந்த பிண உலகத்தில் தன் உயிரைப் பாதுகாவாமல், தனக் o கென்று ஒன்றையும் எண்ணுமல், தனக்கென்று ஒன்றை யும் உரையாமல், தனக்கென வாழாமல் அந்த ஞான சூரியன் உலகிடையே சோதி வீதி உலவிஞன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/123&oldid=744370" இலிருந்து மீள்விக்கப்பட்டது