பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

37



பவளக் கொடியிற் பழுத்தசெவ்
வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகை யும்துணை
யாஎங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை
சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின்கண் டீர்அம
ராவதி ஆளுகைக்கே.

(உரை) நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திர பதவியைப் பெற்றுத் தேவலோக ராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனின் அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப் பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால் மறையச் செய்யும் இரண்டு தனங்களை உடையாளாகிய அபிராமியை வழிபடுவீர்களாக.

காதற் குறிப்புணர்த்துவது திருவாயும், அதன்கண் வெளிப்பட்ட முறுவலுமாதலின் அவற்றைத் தனபாரங்கள் துணையாகக் கொண்டன. சிவபிரானைத் துவளச் செய்தல்: "எந்தை...திருமேனி குழையக் குழைத்திட்ட அணிமணிக் கிம்புரிக்கோ டாகத்ததாக”

(மீனாட்சி, காப்பு.9). காஞ்சித் தலத்தில் அம்பிகை தழுவ இறைவர் குழைந்தார்.

38

ஆளுகைக் குன்றன் அடித்தா
மரைகள்உண் டந்தகன்பால்
மீளுகைக் குன்றன் விழியின்
கடைஉண்டு மேல் இவற்றின்