பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}6 ராமகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தான். தூரத்திலே மரங் களுக்கிடையிலும், சாலைக்குக் குறுக்கேயும் எங்கு பார்த் தாலும் புதிய குளங்கள் மின்னிக்கொண்டிருந்தன. சென்னை யிலிருந்து அபலூர் செல்லும் முக்கியமான சாலையில் தடை ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடத்திற்கும் அவள் போக முடியாது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு டெலிபோன் மணி அடித் தது. அவள் அன்னே டெலிபோனில் பதில் சொன்னுள்: "ஆமாம்...ஆமாம்.வெள்ளம் இன்னும் அதிகமாகிறது!... அவர்களே எல்லாம் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு வந்து விட்டீர்களா? நல்லது!...ஆமாம், கம்பளங்களேயெல்லாம் கொண்டு வாருங்கள். போதுமான அளவு இருக்கும் என்று நம்புகிறேன். ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தைகள் அவசரத் தேவை கிதியிலிருந்து வழங்கியுள்ள பால்பொடி பூனிமதி ஞானம்மாளிடம் இருக்கிறது. அவள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டிருக்கிருளா? ரொம்ப நல்லது. அதைக் கலக்குவதற்கு யாராவது வேண்டும்...” அவள் கண்கள் சுற்றிலும் பார்த்தன. "ஜூடியை நான் அழைத்து வருகி றேன்...ஆமாம் அவள் கிச்சயம் வரலாம். அவள் உபயோக மாக இருப்பாள். பார்க்கப் பிடிக்காத காட்சிகள்-அதற் கென்ன, அவளுக்குப் பதினறு வயது ஆகிறதே.” லட்சுமிக்குக் கடிதம் எழுதி முடிக்க ஜூடி முயன்று கொண்டிருந்தாள். அந்தக் கடிதம் எழுதுவது அவள் எண்ணியதைவிட மிகமிக சிரமமாக இருந்தது. பெரியவ ளாகி விட்ட உணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இப்பொழுது அவள் துள்ளி எழுந்தாள். "ஏம்மா, ஆற் றிற்குப் பக்கத்திலுள்ள மக்களைப் பற்றி எனக்குச் சொன் ஞயே, அவர்களா?”