பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அபிராமி அந்தாதி


(உரை) புதிய ஆலகால விடத்தை நுகர்ந்து கறுத்த திருக்கழுத்தை உடைய சிவபிரானது வாமபாகத்தில் பொருந்திய பொன்னிற மேனிப் பெருமாட்டியே, தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும் அவர்களை அறிவினால் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில், இன்று நேற்று வந்த புதிய வழக்கம் அன்றே? ஆதலால் நீ ஏற்றுக்கொள்ளாது விலக்கும் இயல்புடைய காரியங்களை அடியேன் செய்தாலும், (அவற்றை நீ பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும்) நின்னை வாழ்த்தித் துதிப்பேன்.

பொன்னே; அம்பிகை பொன்னிறமுள்ள திருக்கோலத்தோடும் காகினி யென்னும் திருநாமத்தோடும் ஸ்வாதிஷ்டானத்தில் எழுந்தருளி யிருப்பாளென்பர்: 'பீதவர்ணா' (லலிதா. 507), மறுக்கும் தகைமைகள் என்பதைத் தேவி செயலாகக் கோடலும் ஒன்று; நீ மறுத்தாலும் நான் விடேனென்றபடி: “துடைக்கினும் போகேன்" (தேவாரம்).

46

.

வாழும் படிஒன்று கண்டுகொண்
டேன்மனத் தேஒருவர் -
வீழும் படிஅன்று விள்ளும்
படிஅன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்
டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே
கிடந்து சுடர்கின்றதே.

(உரை) அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரம் பொருளை மெய்ஞ்ஞானத்தால் அறிந்து கொண்டேன்; அது மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறு உள்ள