பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அபிராமி அந்தாதி

"சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்” (தேவாரம்).

இச் செய்யுளோடு, "உடையா ளுன்ற னடுவிருக்கு முடையா ணடுவு ணீயிருத்தி, அடியேன் நடுவு ளிருவீரு மிருப்ப தானால் அடியேனுன், அடியார் நடுவு ளிருக்குமரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம், முடியா முதலே யென் கருத்து முடியும் வண்ண முன்னின்றே" என்ற திருவாசகச் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரிது.

41

இடங்கொண்டு விம்மி இணைகொண்
டிறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்
டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குற் பனிமொழி
வேதப் பரிபுரையே.

(உரை) பரந்த இடத்தைக் கொண்டு பருத்து ஒன்றோடொன்று ஒக்க வளர்ந்து தளர்ச்சியின்றிச் செறிந்து மெத்தெனக் குழைந்து முத்துமாலையை அணியாகக் கொண்ட தனமென்னும் மலயைக்கொண்டு சிவபிரானது வன்மைபெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைக்கும் விரதத்தையும் அதற்கு ஏற்ற அழகையும் உடைய தேவி, நல்ல பாம்பின் படத்தையொத்த நிதம்பத் தையும் குளிர்ச்சியையுடைய திருவார்த்தைகளையும் வேதமாகிய சிலம்பையும் உடையவள்.

முத்து வடங்கொண்ட கொங்கை: 9, 37. அம்பிகையின் நகில் சிவபிரான் திருவுள்ளத்தை அலைத்தல்: 33. கொள்கை - விரதம்; இங்கே பதிவிரதம். பரிபுரம்-சிலம்பு. வேதம் அம்பிகையின் சிலம்பு: “அடிச்சூட்டு