பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 எல்லோரும் புறப்பட்டார்கள். 'கைத்தறி மாளிகை’ ஜூடிக்குப் பிடித்த கடைகளில் ஒன்று. அங்கே ஜூடி தன் தாயை நிறைய கிறையத் துணி வாங்கும்படி செய்து விடுவாள். அந்தத் துணியும் கையால் நெய்யப் பட்டதா யினும் கதரைவிட மிக மெல்லியதாக இருக்கும். ஏனென்ருல் அந்தத் துணிக்கு வேண்டிய நூலே இயந்திரம் உண்டாக்கு கிறது. கைவிரல்களைக்காட்டிலும்அது மிக நன்ருக அதைச் செய்கிறது. கடையிலே பளபளப்பான நிறங்களிலே கெட்டியான பட்டுத் துணிகளும் இருந்தன; ஆளுல் அவை கோடை காலத்திற்கு ஏற்றவையல்ல. கறுப்பும், இளமஞ்சளுமான கரையுடையதும் இளஞ்சிவப்புக் கலந்த ஊதா நிறத்தையுடையதுமான ஒரு துணியிலே ஒரு சேலைக்கு வேண்டிய அளவு வாங்கும்படி ஜூடி தன் தாயைத் துாண்ட முயன்ருள். தையற்காரன் அதை எப்படித் தைப்பானே என்பதைப் பொறுத்தே அதை வாங்க வேண்டும்; மேலும் சேலை அளவான ஆறு கஜம் துணி மிக அதிகம். கடைசியில் அவர்கள் சிவப்பு, இள மஞ்சள், இருவகை நீலம் ஆகிய கிறங்களில் கோடுகளிட்ட துணி யொன்றை வாங்கினர்கள். பாவாடையிலே அந்தக் கோடுகள் மேலும் கீழுமாகவும், கையில்லாத மேலங்கி யிலே அவை சுற்றிச்சுற்றி வருவதுபோலு மிருக்கும். தையற்காரனைப் புரிந்துகொள்ளும்படி செய்வது எப் பொழுதும் எளிதல்ல. உருவத்திலே சிறுத்துத் தோன்றும் அவன் நல்லவன்தான். வீட்டிற்கு வந்து யாராவது தன்னைப் பார்க்கும் வரையில் ஒரு வார்த்தைகட்டப் பேசாமல் கதவுக்கு முன்னல் சம்மணக்காலிட்டு உட்கார்ந்திருப்பது அவன் வழக்கம். துணிகளை அவன் சாளபோன்ற தன்னுடைய சிறிய கடைக்கு எடுத்துச் சென்று வேகமாக வேலை செய்வான். அதிக நாள் பிடிக்கும் என்று அவன்