பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தருக்கு வாய்த்த பயன் 49 என்று சொல்கிருர் பக்தருக்கு அவன் செய்யும் சிறப்பு என்ன தெரியுமா? வண்டியிலேறி மாளிகைக்குப் போக வைக்காமல் வண்டியையே மாளிகையாக்கிவிட்ட மகா ராஜன் அவன். அன்பையே இன்பமாக்கின அமுதன் அவன். பக்தியையே சித்தியாக்கிக் காட்டும் பரமன் அவன். ஆதலின் அவன் பக்தருக்கு வாய்த்த பெருமாள் ஆகிருன். ஆம்! பக்தியே சித்தியாகவும் பாரகமே முக்தியுலக மாகவும் துய்ப்பவர்கள் வாழும் நாடு பாரதநாடு. "அன்றே அப்போதே விடு அதுவே விடு விடாமே" என்று நம்மாழ்வார் முழங்கும் நாடு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/55&oldid=744420" இலிருந்து மீள்விக்கப்பட்டது