பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 குளத்தைக் கடந்து சென்றபொழுது அங்கே லட்சுமி ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அக்த நிலையில் அவள் எழுந்து போய்விட முடியாது. ஆணுல் அவள் புருவங்களே நெரித்துக்கொண்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என்ன காரணம்?” என்று ஜூடி கேட்டாள். லட்சுமி மேஜையின்மேல் விரல்களால் தட்டிக்கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள். புதிய பச்சை கிறச் சேலே யைக்கட்டிக் கொண்டு அவள் பாலேடு போன்ற கிறமுள்ள ரவிக்கை ஒன்றை அணிந்திருந்தாள். 'காங்களெல்லாம் அசுத்தமானவர்கள் என்று உங்களுக்கு எண்ணமா? அழுக்குப் பிடித்த தமிழர்களாம்!” என்று திடீரென்று சொன்னுள். அவள் குரலில் கோபம் தொனித்தது.

  • நீ சொல்வது எனக்குப் புரியவில்லை" என்று ஜூடி உண்மையான திகைப்போடு சொன்னுள்.

'யுேம் உனது சினேகிதர்களும்-வடக்கிலிருந்து வந்திருக்கும் உனது புதிய சினேகிதர்களும்!” என்ருள் லட்சுமி, "ஹரிதாலையா சொல்கிருய்?’ என்று கேட்டாள் ஜூடி. அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை; ஒரே கவலையாக இருந்தது.

  • அவன் பேர் என்னவாக இருந்தாலும் எனக் கென்ன?’ என்ருள் லட்சுமி.

'நீ அவனத்தான் குறிப்பிடுகிருய்-லட்சுமி, அவனுெரு சின்னப்பையன் தானே?” 'சின்னபையன்! அவன் தாயார் என்ன, அவள் ஒரு பெண்தானே என்று சொல்லுவாயென்று கினைக்கிறேன்??