பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மாம்-அப்படித்தான் ராவ் வீட்டுப்பையன்கள் தெரிவித் தார்கள். குதுப்மிஞரைப் பார்க்க அவர்கள் சென்றிருந்தனர். அரபு எழுத்துக்களால் அழகாகப் பொறிப்பட்ட அந்தத் தூபி மிகப் பெரியதாகவும், நீளவாட்டில் பள்ளம் பள்ளமாக இருக்குமாறும் சிவப்பு நிறத்திலே அமைந்திருக்கிறது: விஷ்ணுவின் த்வஜஸ்தம்பமான இரும்புத்துரண் இங்குதான் உள்ளது. “யாருடைய வீர பராக்கிரமக் காற்று வீசி இன்றும் தென் சமுத்திரத்தை நறுமணம் கமழச் செய்கின் றதோ அவர்...” என்று இவ்வாறு பழங்காலப் பெருமை யோடும் அதிகாரத்தோடும் அதிலே சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. கட்டடத்தில் உள்ள கற்கள் தெய்வங்களின் உருவங் களும், அவற்றின் கை கால்கள் முதலியவைகளில் யாதொரு அணியும் இன்றிக் கம்பீரமாக அமைந்திருந்தன. அவ்வாறு இருப்பது எப்படியோ அமைதி தருவதாக இருந்தது. அவர்கள் குதுப்மினரில் ஏறத் தொடங்கினர். ராவ் வீட்டுப் பையன்கள் முன்னல் ஓடித் தங்கள் சாமர்த்தி பத்தைக் காட்டிக்கொண்டனர். இக்திராவும் ஜூடியும் முதல் இருபது படிகளை ஓடிக் கடந்தனர். ஆளுல் அதற்கு மேல் அவர்களுக்குப் பெருமூச்சு வாங்கவே தள்ளாடிக் கொண்டு கடந்தனர். இந்திரா சேலை கட்டிக்கொள்ளாமல் வட இந்தியாவிலே பள்ளிப் பெண்களுக்கென்று வழக்கமாக ஏற்பட்ட கமிலகும், ஷால்வரும் அணிந்திருந்தாள். தொள தொளவென்றிருக்கும் வெள்ளேக்கால் சட்டையும், முழங் கால்வரை நீண்டிருக்கும் மேலங்கியுமான அந்த உடை வசதியானது. இந்திரா அன்று அணிந்திருந்த மேலங்கியில் நீலப் பூப்போட்டிருந்தது. அதற்குமேலே மாரிக்காலத்