பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தட்டிக் காண்பித்தாள். அவர்கள் தவறு செய்யும்போது அவள் திருத்தினுள். இரண்டு, மூன்று தாய்மார்கள் மெளனமாக ஒரு மூலையில் அமர்ந்து கவனித்துக்கொண் டிருந்தார்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து உணர்ச்சி யோடும், சிரத்தையோடும் ஆடும்படி செய்தாள், அதன்பின் பெரிய பெண்களின் முறை வந்தது. ஆனல் மோகினி முதலில் லட்சுமியிடம் திடீரென்று ஓடிவந்து அவளுடைய பட்டுச்சேலையை ஏதோ ஒரு மிக மெல்லிய பொருளைத் தொடுவதைப்போலத் தொட்டுக் கொண்டு, ' எங்களே விட்டுப்போய்விட மாட்டீர்களே?" என்று மெதுவாகக் கேட்டாள். இல்லை, இல்லை’ என்ருள் லட்சுமி. அதிர்ஷ்டம் மாறும் ; ஒரு காளைக்கு இந்த வாழ்வு முடிந்துவிடும்அவர்களேவிட்டு அவள் பிரிந்து போய்விடுவாள் என்ற இந்த எண்ணம் முதல் தடவையாக அவள் மனத்திலே உதித்தது. ஆளுல் இப்பொழுது அவள் பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும். முன்பு நாட்டியம் பயின்றபோது எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டாளோ அதைப்போல இப்பொழுது காட்டியப் பயிற்சி அளிப்பதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். காட்டியமாடும் ஒவ்வொருத்தியோடும் அவள் தன் கண்களாலும், கட்டை யில் தட்டும் ஜதி ஒலியாலும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாள். ஜதிகள் ஒருபொழுது மகிழ்ச்சியோடும், ஒருபொழுது சோர்வோடும், ஒருபொழுது துள்ளியும், ஒரு பொழுது ஆடி அசைந்தும் ஒலித்தன. அந்தப் பெண்கள் அதை எப்படி விரும்பிஞர்கள்; காட்டியத்திலே அவர்கள் எப்படி ஒரு புதிய வாழ்வைக் கண்டார்கள்; அவர்களுக்கு இதையாவது அவள் உதவ முடிந்தது.