பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 வகுப்பில் உள்ளவர்கள் எழுந்து கின்ருர்கள்; தங்களுக் குள்ளேயே குசுகுசுவென்று பேசிக்கொண்டு சிரித்தார்கள். அவர்களே உட்காரும்படி சொல்லிவிட்டு லட்சுமி தன்னைப் பார்க்க வந்திருக்கும் அந்த இங்கிலாந்து மக்களைப் பற்றி எடுத்துரைத்தாள். உலகத்தின் படம் ஒன்று மட்டும் அவ ளிடம் இருந்திருந்தால், அப்பொழுதும் அவள் ஜூடியின் கரங்களைப் பற்றிக்கொண்டிருக்தாள். பிறகு அவள் வகுப்பில் உள்ளவர்கள் தங்கள் அறிவைக் காட்டுமாறு அவர்களை இந்தியாவிலுள்ள இடங்களின் பெயர்களைச் சொல்லும்படி யும், எழுதும்படியும் சொன்னுள். ஆனல் புதிதாக வந்திருப் பவர்களின் முன்னுல் அவர்கள் மிகவும் வெட்கப்பட் டார்கள். முக்கியமாக மோகினிக்கு ஒரே வெட்கம். அவள் ஐரோப்பியர் யாரையும் பார்த்ததில்லை. வள்ளி கொஞ்சம் பரவாயில்லை. கரும்பலகையில் அவள் எழுதிய போதிலும் அவள் கைகள் சற்று கடுங்கின : முணுமுணுப்பதற்குமேல் அவளால் உரத்துப் பேச முடியவில்லை. வயது வந்த பெண்களில் ஒருத்தி பின்னுல் இருந்துகொண்டு ஏதோ சொன்னுள் : லட்சுமி வெடுக்கென்று அவளிடம் பேசிளுள். வகுப்பில் ஒழுங்கை கிலேகாட்டுவது அவசியமல்லவா?

  • இப்பொழுது நான் வகுப்பை இத்துடன் முடித்து விடுகிறேன் ; ஜூடி, உன்னிடம் என்னன்னவோ சொல்ல வேண்டும். எப்படி நீ வந்தாய் ?’ என்ருள் அவள்.

" தற்செயலாக நடந்த ஆச்சரியம் இது. உனக்கு என் கடிதம் கிடைத்ததா?’ என்ருள் ஜூடி. லட்சுமி அவள் கையை இறுக்கிப் பிடித்தாள்; ஒரு கணம் அவள் பதில் சொல்லவில்லை; சுலபமாக ஒரு பொய் சொல்லலாமென்று கினைத்தாள்; ஆளுல் அது தப்பு என்று அவளுக்குத் தோன்றிற்று. அன்புக்குரியவரிடத்திலே