பக்கம்:அறிவியல் விருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 35 ஆழ்த்துகின்றது. அணுவெல்லாம் அடிப்படையில் ஒரு தன்மையனவே என்பதை அறிகின்றோம். மின்னிகளின் ஏற்றக்குறைவே வேற்றுமைக்கு அடிப்படை மின்னிகளின் எண்ணிக்கையை ஏற்றவும் குறைக்கவும் முடியுமானால் ஒர் அணுவை வேறு ஒர் அணுவாக்கலாம். பண்டையோர் கருத்திலமைந்த இரசவாதமும் இந்த அடிப்படையிலேயே அமைந்தது. இதனால் பொன்னும் மண்ணும் (Silicon) ஒன்ருகின்றன. இதையுணர்ந்தே யோகியர் ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் மனப்பான்மையைப் பெற்றுள்ளனரோ என்று கருதவேண்டியுள்ளது. சில எடுத்துக் காட்டுகள்: சில எடுத்துக்காட்டு களால் அணுவின் அமைப்பு இன்னும் தெளிவாகும். மிகச் சிறிய அணு நீரிய அணுவாகும். இதன் உட்கருவின் மின்னேற்றம் + 1 என்றும், நிறை 1 என்றும் குறிக்கப் பெறுகின்றது. இவ்வுட்கரு - 1 மின்னேற்றமுள்ள எதிர் மின்னியால் சூழப்பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக உள்ளது பரிதிய அணு' ஆகும். இதன் உட்கருவின் மின் ஏற்றம் + 2. இதைச் சுற்றிலும் 2 எதிர் மின்னிகன் உள்ளன. ஆனால், பரிதியத்தின் அணுநிறை (அஃதாவது அதன் உட்கருவின் நிறை) நீரிய உட்கருவின் நிறையைப் போல் 4 மடங்கு உள்ளது. இதன் உட்கருவில் இரண்டு நேர் இயல் மின்னிகள் மட்டிலும் இருந்தால் இதன் நிறை 2 ஆகவே இருக்கவேண்டும். மிகுதியாக உள்ள நிறை அதிலுள்ள 2 பொது இயல் மின்னிகளால் ஏற்பட்டதாகும். ஒரு பொது இயல் மின்னியின் நிறை ஒரு நேர் இயல் மின்னியின் நிறைக்குச் சமம். யுரேனியம் 92வது தனிமம் அதன் உட்கரு 92 அலகுகள்" மின்னேற்றம் கொண்டது. 16. Lifála, oggy-Helium atom. 17, so-Unit.