பக்கம்:அறிவியல் விருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மின்னலும் இடியும் இயற்கையன்னை புரிந்துவரும் திருவிளையாடல்கள் எல்லாவற்றிலும் மிகவும் அச்சம் ஊட்டக்கூடியவை இடியும் மின்னலும் ஆகும் என்பதை நாம் அறிவோம். வெடிபடும் அண்டத்திடி பல தாளம் போடும். அந்த இடிமழை நாளை யும், அடிக்கடி பளிச், பளிச் என்று கண்ணைப் பறிக்கும் மின்னலையும் காதைத் துளைத்திடும் இடியையும் கண்டு கேட்டு அநுபவித்தவர்கள், இக்காட்சிகளைத் திரும்பவும் நினைத்துப் பார்க்குங்கால் இவ்வுண்மை தட்டுப்படும். இது நமது அடிவயிற்றினையும் ஒரு கலக்கு கலக்கிவிடும். இக் காட்சியை நன்கு அநுபவித்த பாரதியாரும், 'மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான் வானி ருண்டு கரும்புயல் கூடியே இழையு மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இாைந்தொலி செய்யவும் உழைய லாம்.இடை யின்றியில் வானநீர் ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால் மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண் வாழ்க தாய்! என்று பாடுமென் வாணியே!” என்று பாடுவார். இங்ங்ணம் கண்டோரையும் கேட்டோ ரையும் கதிகலங்கச் செய்யும் மின்னலும் இடியும் கவிஞர் கவின் உள்ளத்தையும் கவர்ந்து பேரிலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. கார்காலப் படலத்தில் கம்பநாடன், 1. பாரதியார் கவிதைகள் பராசக்தி 4.