பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம் : பொருள் அமைப்பு 3} பல்வேறு துறைகளிலுள்ள .ெ ச ப் தி க ளே த் திரட்டுவதற்கும் அறிவியலின் பல்வேறு துறைகளும் எவ்வாறு தொடர்புடையவை என்பதைக் காட்டவும் நல்ல வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஒரு பொருளேக் கூற்ருக இயம்புவதைவிட வினவாகக் கூறினால் அது மாளுக்கர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடும். பொருள்கள் எரிதலால் எவை உண்டாகின்றன?’ என்ற தலைப்பில் வெப்பம்பற்றிய செய்திகள் (பெளதிகம்), ஆக்ஸிஜன் ஏற்றம்பற்றிய தகவல்கள் (வேதியியல்), தாவரங்கள் சுவாசித்தல் (தாவர இயல்), பிராணிகள் சுவாசித்தல் (பிராணி இயல்) ஆகிய செய்திகள் யாவற்றையும் தொகுத்து ஆராயலாம். இந்தத் தலைப்பு இன்னும் இஃதுடன் தொடர்புள்ள பிற பொருள்களேயும் கற்பதற்கு வழி அமைத்தல் கூடும். உணவு வகைகள், விட்டமின் சத்துகள், கிரியாஊக்கிகள், பல்வேறு கிரியா-ஊக்கிச் செயல் முறைள்ே முதலிய செய்திகளை இதன் கீழ்ச் சேர்க்கலாம். ஆக்ஸிகரணத்தையும் சுவாசித் தலேயும் குருதி, இதயம், வால்வுகள், பம்புகள் முதலிய தலைப்புக் களுடன் இ&ணக்கலாம். விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பெற்று செயற்பட்டு வருகின்றன. பல மின்சாரத் திட்டங்களும், நீர்ப்பாசனத் திட்டங்களும் கட்டப்பெற்று வருகின்றன. அவற்றை நடுவாகக்கொண்டும் பல பகுதிகளே இணக்கலாம். நீரின்மூலம் கிடைக்கும் ஆற்றலேப் பயன்படுத்தும் முறைகள், மிக ஆக்கப் பொறிகள், மின்சார நிலையங்கள், மின்சாரத்தைக்கொண்டு எவ்வாறு நாட்டின் உற்பத்திப் பெருக்கம் ஏற்படுத்தலாம் என்பன போன்ற செய்திகளேயெல்லாம் தொகுத்துக் கற்பித்தால் மாளுக்கர்கள் ஆர்வத்துடன் கற்பர். அவ்வாறு பாடத் திட்டங்களே வகுப்பதில் மாளுக்கரின் அறிவு கிலே, ஆசிரியரின் திறன், பள்ளியின் சூழ்நிலை முதலியவற்றை மனத்திற் கொள்ளவேண்டும். 4. பொதுமைய ஒழுங்கு : ஒரு புள்ளியை மையமாகக்கொண்டு பல வட்டங்களே வரையலாமன்ருே ? அது போலவே, ஒரு பொருளின் சில விவரங்களைக் கீழ் வகுப்பிலும், மற்றும் சில விரிவான கூறுகளே அதற்கடுத்த வகுப்பிலும் மேலும் சில விவரமான நுட்பங்களே அதற்கு மேலுள்ள வகுப்பிலுமாகத் தொடர்ந்து கற்பித்தலேப் பொதுமைய ஒழுங்கு என்று வழங்குவர். இவ்வொழுங்கு மாளுக்கர்களின் மன வளர்ச்சிக்கு ஏற்றவாறு அமைகின்றது என்று உளவியலார் கருதுகின்றனர். கீழ் கிலே வகுப்பு மாளுக்கர்கட்கு இவ்வொழுங்கு மிக மிக ஏற்றது. அவர்கட்கு ஏற்ற இயற்கைப் பாடத்தை இவ் வொழுங்கில் அமைத்துக் கற்பிக்கலாம். கீழ் நிலை வகுப்புகளில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பிராணிகள், தாவரங்கள், சில இயற்கைச் செயல்கள் முதலியவை