பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மொழி சிறப்புடன் மிளிர்வதற்குக் கம்பனும் வள்ளுவனும் இளங்கோ வும் ஏனேயோரும் செய்துள்ள இலக்கியங்கள் மட்டிலும் போதா.

  • புத்தம் புதிய கலைகள்-பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை' " என்ற குறை தமிழுக்கிருத்தல் கூடாது. இவையனைத்தும் புற நானூற்றுக் காலத்திலேயே தமிழில் இருந்தன என்று பழங்கதை யையே அடிக்கடி சொல்லி மகிழ்வதால் யாதொரு பயனும் இல்லே. கல்லூரிகளில் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயிற்றப் பெற்ருல்தான் இவையனைத்தும் தமிழில் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் அமையும். அப்பொழுதுதான் பிற நாட்டுச் சாத்திரங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்க்கவும் முடியும். - - - - தமிழில் எல்லாக் கலைகளையும் எழுதவும் விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் இன்னும் ஒப்புக்கொள்வதில்லை. இவர்கள் தமிழ் மொழியில் எல்லாவற்றிற்கும் தக்க கலைச்சொற்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு எண்ணுகின்றனர். எந்த மொழியிலும் அதன் வாயிலாகப் பொருள்களே விளக்க முயன்ருலன்றிப் புதிய கலேகட்கு வேண்டிய சொற்களும் தொடர் மொழிகளும் அமைவதில்லை. பொருள் களே எடுத்துக்கொண்டு விளக்க முயன்ருல் இவை தாமாக அமைந்து விடும். இவ்வாறே ம்ேற்புல மொழிகள&னத்திலும் கலைச்சொற்கள் உண்டாகி, அம்மொழிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. கலைச் சொற்களை உண்டாக்கிக்கொண்டு தாய்மொழியில் கற்பித்தல் தொடங்க வேண்டும் என்று நினைப்பது, ந்ேதக் கற்றுக்கொண்ட பிறகு நீரில் இறங்க வேண்டும் என்று எண்ணுவது போலாகும். செயலில் இறங்கில்ைதான் அனைத்தும் சீர்படும். இலக்கிய இலக்கண வளமும் சொற்களஞ்சியப் பேறும் பெற்றுள்ள தமிழ் மொழியின் நீர்மையை அறிந்து, பிற கலைகளைத் தமிழ் மொழியில் வடித்துத் தரும் பணியில் ஈடுபடுவோர்கள்தாம் தமிழ் மொழி அனைத்திற்கும் வளைந்து கொடுக்கும்’ என்ற உண்மையை அறிவர். அப்பொழுதுதான் சொல்லும் திறம்ை தமிழ்மொழிக்கில்லை என்ற குறையும் நீங்கும். தமிழ் மொழியும் வளர்ந்து மேலும் வளம் பெறும். . ஐந்தாண்டுத் திட்டங்களில் எவ்வளவோ பெருந்தொகைகள் பல துறைகளுக்கும்.செலவழிக்கப்பெறுகின்றன. ஒவ்வொரு கலைத்துறை யிலும் மண்டல மொழிகளில் பல நிலைகளிலும் வெளிவரும் நல்ல நூல் கட்கு மூன்று ஆயிரம், ஐயாயிரம் ரூபாய்கள் பரிசளிக்கும் திட்டத்தை அரசினர் மேற்கொண்டால் பல நூல்கள் உருவாகி வெளிவரும். அவற்றுள் சிறந்தவற்றுக்குப் பரிசுகள் நல்கி, அரசினரோ பல்கலைக் 4. பாரதியார் கவிதைகள் : தமிழ்த்தாய்