பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அறிவியல் பயிற்றும் முறை ഹ விடல் கூடாது. ஒன்றில் காட்டப்பெறும் சிரத்தையைப் பிறி தொன்றிலும் செலுத்த வேண்டும். 3, ஒரு பொருளை நடுவாகக்கொண்ட ஒழுங்கு : ஏதாவது ஒரு பொருளே அல்லது மெய்ம்மையை அறிய நேரிடுங்கால் அ.துடன் தொடர்புள்ள பொருள்களையும் அல்லது மெய்ம்மைகளேயும் கினைவு படுத்திக்கொள்கின்ருேம். இஃது இயல்பாக நடைபெறுவதொன்று. இந்த மெய்ம்மையை அடிப்படையாகக்கொண்டு கீழ் வகுப்புக்களுக்குப் பாடத்திட்டத்தை அமைக்கலாம். இதை இரண்டு விதமாகச் செய்யலாம். (அ) அறிவியல் விதியை நடுவாகக் கொண்டு அமைத்தல் : புவி ஈர்ப்பு விசை, தலைகீழ்ச் சதுரவிதி ஆகியவற்றின் கீழ் எவ்வாறு சில பொருள்களே அமைப்பது என்பதை மேலே கண்டோம். ஆனால், அதுதான் சரியான முறை என்று நினைத்தல் தவறு சற்று வேறு விதமாகவும் அவற்றை அமைக்கலாம். பொறிநுட்பவியல் பகுதி முழுவதையும் வேலை என்ற தலைப்பின்கீழ் அமைத்துவிடலாம். தாவர-, பிராணி-, வளர்சிதை மாற்றத்தைப்பற்றிய எடுகோள்கள் உணவு வகைகளிலுள்ள வெப்ப அளவுகள், உடல் வெப்ப கிலேயைக் காத்தல், வேதியியல் ஆற்றல்வகைகள் முதலிய தகவல்களே யெல்லாம் ஆற்றல் வகைகள்' என்ற தலைப்பின்கீழ் ஒன்ருக அமைக்க லாம். ஒலி, அதிர்வு எண்ணே அளத்தல், அதுநாதம், இசைச் சுரங்கள், ஒலியின் வேகம், மின்சார காந்தம், கிறமாலே, வானொலி முதலிய பொருள்களே அலே இயக்கம்’ என்ற தலைப்பின்கீழ்க் கொண்டு வரலாம். வெப்ப கிலேகளே அளத்தல்’ என்றதன்கீழ், பயன்படக்கூடிய பல பொருள்களேத் தொகுக்கலாம். உயிரியல் பகுதியில் தாவர இயல் பற்றிய பொருள்களேயும் பிராணி இயல்பற்றிய செய்திகளேயும் இணேத்து ஒன்று பிறிதொன்றுடன் எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை ஆராய வழி அமைக்கலாம்; சூழ்கிலேக்கேற்றவாறு அவை எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை ஆராயச் செய்யலாம். பல்வேறு செய்திகளே ஒப்பிட்டுப் பார்க்குங்கால் அறிவியல் நோக்கம், பயன் நோக்கம் ஆகிய இரண்டையும் கருதுதல் வேண்டும். அவற்றைக் கற்பதால் எதிர்பார்க்கக்கூடிய மனப்பான்மை, திறன்கள் மாணுக்கர் களிடம் ஏற்படுமா என்பதையும் சிந்தித்தல் வேண்டும். (ஆ) மானுக்கர்களிடம் அப்போதைய கவர்ச்சி தருபவை : மாளுக்கர்களிடம் கவர்ச்சிகளே உண்டாக்கக் கூடிய தலைப்புகளைப் பொறுக்கி எடுத்து அவற்றை நடுவாகக்கொண்டு பாடங்களே அமைக்கலாம். அப்பொருள்கள் மாளுக்கர்கள் வாழும் இடங்களில் உள்ளனவாகவோ அல்லது செய்தித்தாள்களில் அடிக்கடி காணப் பெறும் பொருள்களாகவோ இருக்கலாம். அப்பாடங்களேப் பயிலும் பொழுது அறிவியல் விதிகளைக் காணச் செய்யலாம். இந்த அமைப்பில்