பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு மூன்றுகிலை மாளுக்கர்கள் : தனிப்பட்டோரின் மனவளர்ச்சி சில கூறுகளில் மனிதக்குடிவழியின் மன அதுபவத்தை யொட்டியுள்ளது என்று உளவியலார் கூறுகின்றனர். மாளுக்கர்களின் கல்வி இந்த உண்மையின் அடிப்படையில் அமைந்தால் அது சிறந்தி முறையில் பொலிவுறும் என்றும் அன்னர் கருதுகின்றனர். கல்வி என்பது மன அநுபவத்தைப் பெறுதலே என்று அவர்கள் கூறுகின்றனர். குழந்தை களின் வயதிற்கேற்றவாறு அவர்களின் அறிவுகிலே, உணர்வுகிலே, இயல்பூக்கங்கள், பொருளுணருந்திறன் முதலியவை மாறுபடும் என்பது உளவியலார் கண்ட உண்மை. எனவே, இவ்வுண்மையை மனத்திற்கொண்டு அறிவியல் பாடத்திட்டம் அமைதல்வேண்டும். நமது நாட்டுப் பள்ளிகளிலுள்ள மாணுக்கர்களே மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையிலுள்ளவர்கள் 5-10 வரை வயதுடையவர்களாக இருப்பர் ; அவர்கள் தொடக்கங்கிலப் பள்ளிகளில் பயில்வர். இரண்டாவது வகையிலுள்ளவர்கள் 10-14 வரை வயதுடையவர்கள்; அவர்கள் நடுகிலேப் பள்ளிகளில் கல்வி பெறுவர். மூன்ருவது வகையிலுள்ளவர்கள் 14-16 வரை வயதுடையவர்கள் : அவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் பயில்பவர்கள். இம் மூன்று நிலையிலும் கல்வி பெறுவோர் அறிவியல் கற்க வேண்டும். அவர்கள் அறிவுநிலைக் கேற்றவாறு பாடத்திட்டம் அமைதல் வேண்டும். தொடக்கநிலை : தொடக்கநிலை மாணுக்கர்களிடம் சிறப்பாகக் காணப்பெறுவது விடுப்பூக்கமாகும். பிராணிகளின் இயக்கங்கள், அவற்றின் குரல்கள், கண்ணேக் கவரும் வண்ணங்கள், பல்வேறுவகைப் பூக்கள், அவற்றின் மணங்கள் ஆகியவை அவர்கள் மனத்தைக் கவரக் கூடியவை. இயற்கைச் சூழல்களும் செயல்களும் மட்டுமே அவர்கள் மனத்தைக் கவரும் என்பதில்லை : அசைவதாலோ இயல்புக்கு மாருன பிற பண்பாலோ உயிரற்ற பொருள்களும் அவர்கள் மனத்தைக் கவரும். எடுத்துக்காட்டுகளாக சுருள் விசையால் இயங்கும் விளையாட்டுக் கருவிகள், சோப்புக் குமிழிகள், விளையாட்டுப் பலூன்கள் முதலியவற்றைக் கூறலாம். குழந்தைகள் கண்ணுல் காண்பதாலும், காதால் கேட்பதாலும் தொட்டு உணர்வதாலும்தான் அவர்களின் மன விம்பங்கள், மாதைக்