பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அறிவியல் பயிற்றும் முறை இன்றியமையாதது. எண்ணிப் பார்த்தால் அவை யாவும் மாணுக்கர் கள் வாழும் இயற்கைச் சூழ்நிலையைப்பற்றிய தகவல்களாகும். இயற்கையை மனிதன் எவ்வாறு தன் வாழ்க்கையில் பயன் படுத்துகின்ருன் என்பதைப்பற்றி மாளுக்கர்கள் அடுத்தபடியாக அறிந்துகொள்ள வேண்டியதாகும். இதற்கு முன்னதாக அவர்கள் மனித உடல், உடலுறுப்புகள், உடல்நலம் ஆகியவைபற்றிய அறிவினே எய்துதல் வேண்டும். உடல்நிலை இயற்கையைப் பயன்படுத்துவ தாலும் பாதிக்கப்படும் : இயற்கையை மாற்றியமைப்பதற்கும் உடல் கிலே கன்ருக இருத்தல்வேண்டும். சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுத வேண்டும் உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்ற ஆன்ருேர் வாக்கையும் எண்ணி உணர்க. அறிவியல் கல்வி ஏற் பாட்டை வில்வளேவுக் கட்டடத்திற்கு ஒப்பிடலாம். அவ்வாறு ஒப் பிட்டால், மனித உடலேப்பற்றிய பாடத்திட்டம் அவ் வளேவின் நெற்றிக் கல்லாக அமையும், அக் கட்டடத்தின் ஒரு புறத்தில் இயற்கை உலகமும், மற்ருெரு புறத்தில் இயற்கையைப் பயன்படுத்தும் முறைகளும் அமையும். மனிதன் இயற்கையைத் தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் துறை மிக விரிந்த நிலையிலுள்ளது. காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கிய செயல்களாலும் வேளாண்மை, கட்டடத்தொழில், சாலை அமைக்குந்தொழில் முதலியவற்ருலும் மனிதன் இயற்கை அன்னையைப் புதுக்கோலம் பூணச் செய்து மகிழும் தகவல்களேயும், மனிதன் கண்டறிந்த வேதியியற் பொருள்கள், உலோக வகைகள், குடிப்பதற்குத் தூயநீர், எரிப்பதற்கு வாயு, இயக்குவதற்கு மின்சாரம் ஆகியவற்றை உண்டாக்கிய தகவல்களையும், இன்னுேரன்ன பிற செப்தி களேயும் மாளுக்கர் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 2. உற்றுகோக்கும் திறனையும் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்த்தல் : அறிவியல் பயில்வதால் மாளுக்கர்களிடையே உற்று நோக்கும் திறனும், சிந்திக்கும் ஆற்றலும் வளர்கின்றன என்று கூறப்படுகின்றது. புலன் களே மட்டிலும் கொண்ட உற்றுநோக்கல் அறிவியலுக்குப் போதுமான தன்று காணல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல், ஆகிய ஐந்து புலன்களேயும், உளவியலார் கூறும் பிற புலன்களேயும், பயன்படுத்தி நிகழ்த்தப்பெறும் உற்றுநோக்கலால் எல்லாவற்றையும் கண்டுவிட முடியாது. ஒலிபெருக்கி, நுண்ணணுப் பெருக்கி, தொலேகோக்கி முதலிய கருவிகளைக் கையாண்டும் புலன் அறிவை மிகுதிப்படுத்திக்கொள்ள நேரிடக் கூடும். அன்றியும், திரவமட்டமானி நிறமாலைமானி, கோளமானி போன்ற மிகச் சிக்கலான கருவிகளைக் கொண்டும் உற்றுநோக்கல் நடைபெற வேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன. புலன்களால் கண்டறிய முடியாதவற்றைச் சோதனைகளால் 1. பட்டினப் பாலே - வரி 288-84.