பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 இந்நூல் உருவாகிக்கொண்டிருக்கும் பொழுது பிரதி சரியாக அமைவதற்குப் பல விதமான யோசனேகளைக் கூறியவர் என் கெழுதகை நண்பர் உயர்திரு. சா. கணேசன் அவர்கள்; தமிழில் எல்லாக் கலைகளையும் வடித்துத் தந்து தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று துடித்து கிற்கும் உயர்குணச் செம்மல்; பல்கலைகளிலும் அநுபவம் மிக்கு பல்வேறு கலைஞர்களிடமும் சுவையாக உரையாடும் பண்புடை யாளர் செய்வன திருந்தச் செய்' என்ற பழமொழியின் உயிர்காடியை இவரிடம்தாம் காணல் வேண்டும். கலைச்சொற்களே ஆக்கும் பொழுது அவர்களிடம் மேற்கொண்ட விவாதம் பல அருமையான கலைச்சொற்களைப் பிறப்பித்துள்ளன. இவ்வாறு எனக்குப் பல விதங்களில் உதவி புரிந்த இப்பெரியாருக்கு என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ఖి இந்நூலைச் செவ்விய முறையில் பதிப்பித்து அழகுற ஆக்கிக் கற்போர் கரங்களில் கவினுறப் பொலியச் செய்த பழகியப்பச் சகோதரர்கள் அவர்கட்கு என் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன். ஆண்டவன் திருவருட்பெருக்கை எண்ணி எண்ணி ஒவ்வொரு வரும் தத்தமக்கு இயலக்கூடியவற்றை அவன் திருவடிகளில் சமர்ப்பித்து மகிழ்கின்றனர். ஆண்டவனிடமிருந்து உலகோர் பெறும் திருவருட்பயனுக்கு உலகினர் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பொருள் கள் சிறிதும் ஈடாகா. அவை அவர்களின் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறிகளேயன்றி வேருென்றும் இல்லை. வள்ளல் டாக்டர் அழகப்பர் அவர்கள் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்கட்கும் செய்த, செய்து வருகின்ற நற்பணியை மனித எண்ணத்தில் அடங்கக்கூடிய அளவைகளால் அளந்தறியவொண்ணுது. பல கலைக்கூடங்களே நிறுவி, பல கலைகளே வளர்க்கும் உண்மைச் செல்வர் அவர் அறிவும் ஆற்ற லும் அத்தனைக்கும் மேலாகத் தனக்கென்று, ஒன்றேனும் உள்ளாப் பண்பாடும் நிறைந்த மேதை. அத்தகைய பெரியார் நிறுவியுள்ள கலேக்கூடம் ஒன்றில் பணியாற்றும் சிறியேன் அவர்கள்பால் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இந்நூலே அவர்கள் திருவடிகட்கு அன்புப் படையலாக்குகின்றேன். கல்லூரி மானுக்கர்கட்கெனத் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முதல் நூலே பல கல்லூரிகளேத் தோற்றுவித்து வளர்த்துவரும் அப்பெரியார் அவர் களின் திருவடிகட்குப் படையலாக்குவதைக்காட்டிலும் பொருத்த மானது வேருென்றும் உண்டோ ? எனக்குள்ள பலவகையான குறைகளால் இந்நூலில் பலவித குறைபாடுகள் ஏற்பட்டிருத்தல் கூடும். சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். அவற்றை அன்பர்கள் பொறுத்தருள்வார்களாக. நூலே அன்பர்கள் ஊன்றி நோக்கிக் குறைபாடுகளேயும் கருத்து வேறுபாடு களையும் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அவற்றைத் திருத்திக்