பக்கம்:அறிவியல் விருந்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 73 நம் பூமியில் காணப்பெறும் 92 தனிமங்களில் 60 பொருள்கள்வரை கதிரவனில் காணப்பெறுகின்றன. இவற்றில் உலோகங்களைக் காட்டிலும் அலோகங்களே அதிகமாகும். எல்லாப் பொருள்களையும்விட நீரியமே அதிக அளவு உள்ளது. கதிரவனின் வெளி எல்லைக்குச் சென்று கதிரவன்ை நோக்கக்கூடுமாயின் அஃது ஒரு மீனம்போலவே தோன்றும். நெடுந்துாரம் வானிற் சென்றால் அஃது ஒரு சிறு மீன் போலாகிவிடும். வாணவெளியில் காணப்பெறும் அண்ட களில் கதிரவனும் ஒன்றேயன்றோ? அண்டங்களின் அதிசயங்களை நம்மால் வருணித்தல் கூடுமோ? ஆண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பேருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." என் மணி வாசகரின் வாக்கினைக் காண்மீன், எனவே, ஆண்டவனின் பேராற்றல்தான் என்னேயென்று வியப்புக் கடலிலாழ்வதே நமக்கு இயல்பாக அமைந்து விடுகின்றது. {3} கோள்கள் மேலே விவரிக்கப்பெற்ற கதிரவன் ஒரு பெருங் குடும்பத்தின் தலைவன். கோள்களும், சிறு கோள்களும், வால்மீன்களும், எரி மீன்களும் அவன் பெற்றெடுத்த குழவிகள். நம் பூமியையும் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ இவற்றையும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ள துணைக்கோள்கள் இவனுடைய 10. திருவாசகம்; திருவண்டிப்பகுதி-அடி (1-4)