பக்கம்:அறிவியல் விருந்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் ##3 பச்சிளங் குழவியும், இளங் காதலர்களும், முற்றுச் துறந்த முனிவர்களும் அதன் எழிவில் ஈடுபட்டுக் கண்டு களிக்கின்றனர். கவிஞர்கள் அதன் பேரழகில் ஈடுபட்டுத் தம்மையும் மறந்து பாடுகின்றனர். 'நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைகீ கோலமுழு துங்காட்டி விட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்கு டமோ? அமுத ஊற்றோ காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி மும்போ!' என்று பாடிக் களிக்கின்றார் புரட்சிக் கவிஞர். கவிஞர் பெருமானாகிய கம்பநாடரும், 'பெருந்திண் நெடுமால் வரை நிறுவிப் பிணித்த பாம் பின் மணித்தாம்பின் விரிந்த திவலை யுதிர்ந்தமணி விகம்பின் மீனின் மேல் விளங்க அருந்த அமரர் கலக்கிய நாள் அமுது நிறைந்த பொற்கலசம் இருந்த திடைவந் தெழுந்ததென எழுந்த தாழி வெண்திங்கள்.” "நீத்தம் அதனில் முளைத்தெழுந்த நெடுவெண் திங்கள் எனுந்தச்சன் மீத்தண் கரங்கள் அவை பரப்பி மிகுவெண் நிலவாம் வெண்கதையால் காத்த கண்ணன் மணியுந்திக் கமல நாளத் திடைப்பண்டு _ 2. பாரதிதாசன். புரட்சிக் கவி,