பக்கம்:அறிவியல் விருந்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் 65 திற்கு முன்புறமாக இருந்த பெரிய மரம் ஒன்றில் ஒரு மின்னல் தாக்கியது. அம் மின்னல் மரத்தினின்றும் வீட், டிறைப்பு' வழியாக வீட்டிற்குள் தாவியது; சுவரின் வழி யாக அஃது உள்ளே இருந்த இரும்புக் கட்டிலுக்குப் போயிற்று. நல்ல வேளையாக அஃது அக்கட்டிவில் உறங் கிக்கொண்டிருந்த ஆளைத் தீண்டவில்லை. அடுத்து அது தரைவழியாக அட்டிலறையிலுள்ள அடுப்பிற்குத் தாவி யது. அடுப்புக் குழலினின்றும் அஃது அட்டிலறையின் குறுக்கே சென்று ஒரு தொலைபேசிக் கம்பியை அடைந்து அதன் பிறகு தரைக்குள் பாய்த்துவிட்டது. இங்ஙனம் மின்னல் எத்தனையோ வழிகளை நாடுகின்றது. நாம் வெளியே உலானச் சென்றிருக்கும்பொழுது இடி மழை ஏற்பட நேரிட்டால், உடனே அருகிலிருக்கும் ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கத் துணிவோம். இது மிகவும் கேடு பயக்கக்கூடிய இடம் என்பதை நாம் சாதாரண மாக அறிவதில்லை. அருகிலிருக்கும் தரையை விட அந்த மரத்தில்தான் இன்னல் பாய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. காரணம், மின் தாக்குதலுக்கு அது தான் அண்மையில் தயாராகவுள்ள வழியாக அமைகின்றது. அந்த மரம் சிறிதளவு மின்னிறக்கத்தைப் பூமியிலுள் கொண்டுசெலுத்துதல் கூடும். ஆனால், அஃது அதிகமான மின்னோட்டத்தைத் தாங்கிச் செல்லக்கூடிய நல்ல கடத்தியன்று. மரத்தினடியில் ஒதுங்கியிருக்கும் தாம் மின்னலின் பக்கவாட்டு ஒளியால் தாக்கப்பெறுதல் கூடும்; அல்லது நாம் ஆடும் கிளைகளால் ஊறுபடுத்தப்பெறுதலும் கூடும். இடிமழை நேரிடுங்கால் புறத்தேயுள்ள நீர்நிலைகளில் நீத்துவதும் அபாயகரமானது: படகில் செல்வதும் அபாயமே. நீரை மின்னல் தாக்கும்பொழுது (அஃது 15. வீட்டிறைப்பு-Eawes.