பக்கம்:அறிவியல் விருந்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32(? அறிவியல் விருந்து அனுப்பின. இந்த மிகப் பெரிய அருஞ்செயல் பூமியினின்றும் எப்பொழுதும் மறைந்துள்ள மதியின் மறுபுறத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் கணநேரத் தோற்றத்தை நமக்கு அளித்தது. 1960-ஆம் யாண்டு மே 15-இல் ஸ்புத்ணிக்-IV அயனப் பாதையினுள் சென்றது. ஏதோ எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதனை மீண்டும் வளிமண்டலத்திற்கு இரஷ்யர்கள் கொண்டுவர முடியாது போயிற்று. அதே யாண்டு ஆகஸ்டு 10-இல் அமெரிக்கர்கள் அனுப்பிய சிறிய டிஸ்கவரர்-X11 என்ற துணைக்கோளை அயனப்பாதையினின்றும் திரும்பப் பெற்றுப் புகழடைந் தனர். ஆனால், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இரஷ்யர்கள் தாம் அனுப்பிய ஸ்புத்ணிக்.V-ஐத் திரும்பவும் பெற்றதால் இப் புகழ் மிகவும் மங்கிவிட்டது. இதனுள் ளிருந்த பெல்க்கா, ஸ்ட்ரெல்க்கா என்ற இரண்டு நாய்கள், நாற்பது ‘சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், துண்கிருமிகள்” ஆகிய உயிர்ப் பொருள்கள் யாவும் பிழைத்துத் தப்பின. அதன் பிறகு அமெரிக்காவிலும் இரஷ்யாவிலும் பல விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று வெற்றியுடன் திரும்பினர். இவ்விடத்தில் இன்னொரு செய்தி நினைவுகூரத் தக்கது. புவியைச் சுற்றிலுமுள்ள அயனப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துணைக்கோளினின்றும் கிளம்பும் ஒர் ஊர்திக்குப் புவியின் மேற்பரப்பினின்றும் செல்லும் ஊர்தியைவிட மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படுகின்றது. அதற்கு வளிமண்டலத்தினை ஊடு ருவிச் செல்வதற்குரிய ஆற்றலும் புவியின் இழுவிசையைச் சமாளிப்பதற்குரிய ஆற்றலும் தேவை இல்லை. மேலும்: 17. stisk stgiếssà-Microbes.