பக்கம்:அறிவியல் விருந்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 129 பகுதி மட்டிலும் மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் பூமிவை நெருங்கியது. இந்தக் கலன் வெப்பமடைந்து எரிந்து சாம்பரனகாதிருக்க விண்கலனைச் சுற்றி வெப்பத் தடுப்புக் கவசம் ஒன்றிருந்தது. விண்கலன் 5000°F வெப்பத்துடன் கழுக்கக் காய்ச்சியதுபோன்றிருந்தாலும் வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81°F) இருந்தது. என்னே அறிவியலின் அற்புதம்! விண்கலன் புவியிலிருந்து 72,000 மீட்டர் உயரத்தி லிருந்தபோது இரண்டு குதிகொடைகள் (Parachtes) விரிந்து கொடுத்துக் கலனின் வேகத்தைத் தணித்தன. 30ேே கி. மீ. உயரத்தில் மேலும் மூன்று குதிகொடைகள் விரிந்து கொடுத்தன. இதனால் விண்கலன் அதிக அதிர்ச்சியின்றிப் பசிஃபிக் மாகட்வில் குறிப்பிட்ட இடத்தில் வந்துவிழுந்தது. வட்டமிட்ட வண்ணமிருந்த ஹெலிகாப்டர் விமானங்களில் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க் கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தது. மாலுமிகள் வின் கலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றனர். விண்வெளிப் பயணம் தொடங்கினபோது 35 மாடிக் கட்டடத்தின் உயரம் இருந்த அமைப்பு அப்பயணம் நிறைவு பெற்றபோது 3.42 மீட்டர் உயரம் உள்ள விண்கலன் மட்டிலுமே எஞ்சி நின்றது. புவியில் 21 நாட்கள் குவாரன்டைன் (Quarantine) முடிந்ததும் விண்வெளி வீரர்கள் தம்மெஈடுகொண்டு வந்த கடிதம் வாஷிங்க்டன் தகரில் மக்கள் பார்வைக்கு வைக்கப் பெற்றது; பிறகு வெளிநாடுகளிலும் அங்ங்னமே வைக்கப் பெற்றது. விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய அச்சு ஆகஸ்டு இறுதியில் நடைபெற்ற முதல் நாள் வெளியீட்டு விழாவில் பத்துசென்டு பெரிய விமான அஞ்சல் தலையின் மீது குத்தப்பெற்றது.