பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

33

கவனிக்காமல் இருந்துவிட்டேன். நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன். தாங்கள் வந்திருப்பது எனக்குத் தெளிவாகத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே வந்திருப்பேன்." - அவன் உண்மையில் மனம் குழைந்து மன்னிப்பு வேண்டினான் , அழாத குறைதான்.

ஒளவையார் உண்மையை உணர்ந்தார். அவர் வந்திருப்பதை யாரும் தெரிவிக்காத போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? அவர் சினம் தணிந்தார். அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். சிறந்த இடத்தில் இருக்கச் செய்து அன்புடன் உரையாடினான்.

ஒளவையார் சினம் மாறியதோடு அதிகமானுடைய பண்பையும் உணரத் தொடங்கினர். இரண்டு நாட்கள் தங்கி விடை பெற்றுக்கொண்டார். "அடிக்கடி வந்து தமிழின்பத்தை நான் நுகரும்படி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான் அதிகமான்.

*

நெடுமான் அஞ்சியின் நாட்டில் கஞ்சமலை என்ற மலை ஒன்று உண்டு. பல மருந்துச் செடிகள் உள்ளது அது; முனிவரும் சித்தரும் நாடி மருந்துக்குரிய மூலிகைகளைத் தேடிப் பெறும் சிறப்புடையது. அங்கே ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று இருந்தது. அது எங்கும் காணுவதற்கரிய சிறப்பை உடையது; பல ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் தன்மை பெற்றது. மருத்துவர்கள் அதன் பெருமையை உணர்ந்து அதிகமானிடம்