பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-2 73 நன்கு விளக்கும். அன்றியும், முன்னேர் சென்ற வழியில்தான் பின்னேரும் சென்றனர். எடுத்துக்காட்டாக ஹேல்ஸ் என்பாரின் ஆராய்ச்சி பிரிஸ்டிலிக்கு வழி காட்டியது. பிரீஸ்டிலியின் ஆராய்ச்சி லெவாய்ஸ்ருக்கு வழி யமைத்தது. பல்லாண்டுகள் இப்பெரியார்கள் உழைத்த பிறகு ஒரு சில பிரச்சினைகளேத்தான் தீர்க்க முடிந்தது. உண்மை இங்ங்ணமிருக்க, பள்ளிச்சிருர்களிடம் என்ன கண்டுபிடிப்பை எதிர் பார்க்க முடியும் மிகத் திறமையான ஆசிரியர் ஒருவர் மிகவும் சிறிய வகுப்பை (கான்கு பேர் அடங்கியுள்ளது) மேற்கொண்டால்தான் இம்முறையால் சிறிதளிவாவது பயன் காணலாம். அதுவும் அதுபவத் தில் சாத்தியமல்ல. ஆய்வகத்தில் நடைபெறும் சோதனைகளை மட்டிலும் கையாண்டு மாணுக்கர்களிடம் கிரந்தரமான கருத்துகளே உண்டாக்க முடியாது ; அவை தொடர்புடனும் இருத்தல் முடியாது. இவ்வாறு தொடர்பற்று இருக்கும் இடைவெளி அறிவை சொல்லும் முறையால்’ நிரப்புவதற்கு இம்முறையில் வாய்ப்பு இல்லே. கடைமுறையிலுள்ள பள்ளிப் பாடவேளைப் பட்டியில் (Tim table) இம்முறையைப் பொருத் துவது குதிரைக் கொம்பாகும். அறிவியலிலுள்ள எல்லாப் பகுதிகளே யும் இம்முறையால் கற்க முடியும் என்று எண்ணுவது தவறு. மானுக்கர் களும் சோனகள்தாம் அறிவியல் என்ற தவருண முடிவுக்கு வந்து அறிவியலேப்பற்றியே தவருன கருத்துகளேப் பெறுகின்றனர். பெளதிக இயல், வேதியியல் போன்ற துறைகளில்கூட அனத்தையும் சோதனைகளால் கற்க முடியும் என்று கூற இயலாது. சோதனை களுக்கு இணங்குகின்றன என்பதற்காகவே சில பகுதிகள் பாடங் களாக அமைகின்றன ; செய்ய வேண்டும் என்பதற்காகவே மானுக்கர் கள் அறிவுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பெறுகின்றன. எனவே, கற்க வேண்டிய அறிவியல் பகுதி குறைவுபட்டு மாளுக்கர்கள் குறைந்த அறிவுடன் பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர். புதியது புனேந்த அறிவியல் அறிஞர் களின் அருஞ்செயல்களேப்பற்றிக் கூறும் வரலாற்று அறிவு அவர்கள் பெற முடியாது போகின்றது. * மாளுக்கர்கள் அனேத்தையுமே கண்டறிகின்றனர் என்று கூறுவ தெல்லாம் மிகைப்படக் கூறுவதாகும். ஒன்றுமறியாச் சிறுவர்கள் என்ன காண முடியும் ? வேண்டுமானல் மேசை அறையில் மறைந்து கிடக்கும் சோதனைக் குழாயைக் கண்டறியலாம் : பல மெய்ம்மைகளுக் கிடையே மறைந்து கிடக்கும் அறிவியல் விதியை அவர்கள் எங்ங்னம் காண இயலும் தனக்குத் தெரிந்தவற்றையே அறியாதவன் போல் 1 “The romance of modern scientific discovery and invention is a. sealed book to them and the humanizing influence of the subject has been kept entirely from them.” - —Westaway (Science Teaching p. 69.)