பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ఢీ - அறிவியல் பயிற்றும் முறை நூலகப் பகுதிகள் அறிவியல் நூலகத்தை பொதுப் பகுதி, தனிப் பகுதி என இரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு இரு பகுதிகளிலும் ஏற்ற நூல்களே வாங்கி வைத்தல் வேண்டும். பொதுப்பகுதியில் மேற்கோள் நூல்களேச் சேகரித்தல் வேண்டும். தோட்டக்கலைக் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம், பல நல்ல அறிவியல் பாடநூல்கள், அறிவியல் துறைகளே இன்பமாக ஏற்றுப் படிப்பதற்கு எழுதப்பெற்ற நூல்கள் முதலியவற்றைச் சேகரிக்கலாம். கீழ் வகுப்புகளுக்கு வாங்கும் நூல்களில் பட விளக்கம் அதிகமாக இருத்தல் வேண்டும். தனிப் பகுதியில் உள்ளெரி பொறி, நீராவிப் பொறி, குடிர்ேத் திட்டம், மின்சார வினியோகத் திட்டம், மின் ஆக்கப் பொறி போன்றவற்றின் அமைப்புகளே விளக்கும் நூல்கள், சவ்வூடுபரவல், ஒளிப்படம் எடுத்தல், ஓம்ஸ் விதி, கிரஹாம் விதி போன்றவற்றைச் சோதனைகள் மூலம் விளக்கும் நூல்கள், சில முக்கியமான வேதியியற் பொருள்களேத் தயாரிக்கும் முறைகளே விளக்கும் நூல்கள், அறிவியல் துறைபற்றிய முக்கிய எடுகோள்களைத் தரும் லாகரிதம் வாய்பாடு போன்ற நூல்கள் ஆகியவற்றை வாங்கி வைக்கலாம். இங்கு நல்ல அறிவியல் பாட நூல்களும் இருந்தால் மாளுக்கர்கள் ஐயம் நேரிடுங்கால் அவற்றைப் புரட்டிப் பார்க்க ஏதுவாக இருக்கும். இவற்றைத் தவிர, பல்வேறு சோதனைகளைச் செய்யுங்கால் மாளுக்கர்கள் பின்பற்ற வேண்டிய சில முறைகளை விளக்கும் டைப் அடித்த குறிப்புகளேயும் இப்பகுதியில் வைக்கலாம். உற்சாகம் மிக்க ஆசிரியராக இருந்தால் நாளாவட்டத்தில் இத்தகைய குறிப்புகளைப் பெருக்குவார். பண வசதியிருந்தால் சில இன்றியமையாத நூல்களில் இரண்டு படிகள் வாங்கி ஒன்றைப் பொதுப்பகுதியிலும், பிறிதொன்றைத் தனிப்பகுதியிலும் வைக்கலாம். நூல்களைத் தேர்ந்தெடுத்தல் நூல்களைப் பொறுக்கி எடுப்பதில் ஆசிரியர் சில முறைகளே மேற்கொள்ளுதல் வேண்டும். பட்டறிவு மிக்க ஆசிரியர்களும் இத்துறையில் திறமையாகப் பணியாற்ற இயலாது. நாளிதழ்கள். வார வெளியீடுகள், திங்கள் இதழ்கள் முதலியவற்றில் வெளி வரும் மதிப்புரைகளைப் படித்தும், நூல்கள் விற்கப்பெறும் கடைகளில் நூல்களே கேரில் பார்த்தும், நூல் விலேப் பட்டிகளிலிருந்தும் தேவையான நூல்களைப் பொறுக்கி எடுத்தல் வேண்டும். பள்ளி வருவாயையும் அரசினர் கொடுக்கும் மானியத்தையும் கொண்டு ஆண்டிற்குக் கொஞ்சமாக நூல்களே வாங்கிக்கொண்டே யிருந்தால்தான் காளாவட்டத்தில் நூலகத்தில் நூல்கள் கன்முறையில் பெருகும். 9. இயற்கைப் பஞ்சாங்கம் : ஆ ண் டு தோறும் அன்ருடம் இயற்கையைக் கூர்ந்து கோக்கியதால் அறிந்த செய்திகளே முறைப் படுத்தித் தொகுத்து வைப்பதை இயற்கைப் பஞ்சாங்கம் என்று T1. Nature, school Science Review, Discovery, Scientific American, Popular Mechanics, Popular Science, Industry, முதலியவை சில இதழ்களாகும்.