பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 60 அறிவியல் பயிற்றும் முறை நிறைந்த கல்விப் பயனையும் அடையலாம். அறிவியல் துறை செயல் முறையாதலால் பிற துறைகளில் காட்ட முடியாத பல்வேறு செயல் களைக் காட்டிப் பார்வையாளர்களின் மனத்தைக் கவரலாம். மாளுக்கர்களாலேயே ஆயத்தம் செய்யப்பெறும் இத்தகைய பொருட் காட்சியில் மாளுக்கர்களால் காட்டப்பெறும் சோதனைகளின் தாற்பரியத்தை அவர்கள் தெளிவாக அறியவும் கையாளும் முறை களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. கூர்த்த மதியுடைய அறிவியல் ஆசிரியர் இவ்வுண்மையை கன்கறிந்து இத்தகைய சந்தர்ப்பங்களே முழுமனத்துடன் வரவேற்கின்ருர். - இக்காட்சி நடைபெறுங்கால் காட்டப்பெறும் சோதனைகளே யெல்லாம் பட்டியல் போட்டுக் காட்ட இயலாது. அநுபவத்தில்தான் ஆசிரியர்கள் அவற்றைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். மேடுைகளி லிருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல் நூல்களேயும், அறிவியல் களஞ்சியங்களேயும் பார்த்துப் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம். சோதனைகளை விளக்கும் முறை : அறிவியல் பொருட்காட்சியை வெறும் களியாட்டமாகக் கொள்ளாது பொது மக்களுக்கும் பெற்ருேர் களுக்கும் பல அறிவியல் மெய்ம்மைகளேப் புலப்படுத்தும் நோக்கமாகக் கொள்ளல் வேண்டும். ஒரே சோதனையைப் பல்வேறு விதமாகக் காட்டலாம். எடுத்துக்காட்டாக, பல்வேறு அளவுகளுள்ள தத்துகிக் குழாய்களே வரிசையாக வண்ண நீரில் வைத்தால், நீர் வெவ்வேறு மட்டங்களில் ஏறி நிற்பதைக் காணலாம். இப் பரிசோதனையின் தலைப்பில் தந்துகித்தன்மை' என்று எழுதி வைத்தால் யாருக்கு என்ன தெரியும் ? வகுப்பில் இதைப்பற்றிப் பயிலாத மாளுக்கர் களாவது ஏதாவது அறிந்துகொள்ள முடியுமா? கீழ்க்கண்டதைப் போன்ற சுவரொட்டியால் அனைவரும் விளக்கம் பெறுதல்கூடும். நீர் சிறுகுழல்களில் ஏறுவது ஏன்? நுண்ணிய கண்ணுடிச் சின்னங்கள் நுண்ணிய நீர்ச் சின்னங்களை ஈர்க்கின்றன. குழல் குறுகி இருந்தால், நீர்ப்பிழம்பு அதிக எடை இராது ; ஆகவே, நீர் அதிக உயரத்திற்கு ஈர்க்கப் படுகின்றது. பயிர்களும் மரங்களும் இத்தகைய மிகச் சிறிய குழல்களைக் கற்றைக் கற்றையாகப் பெற்றுள்ளன. இவை வேர்களிலிருந்து இலகள் வரையிலும் நீரை ஏற்றுகின்றன. இம்மாதிரியே ஒவ்வொரு சோதனையையும் கவை தரும்படி விளக்கிக் காட்டலாம்.