பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலும் பிற பாடங்களும் ህ79 தகவல் மூலங்கள் : அறிவியலேப் பிற பாடங்களுடன் இசீனத்துக் கற்பிக்க வேண்டுமானுல் அறிவியல் ஆசிரியர் கலேபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் உலகியலறிவும்’ ஒருங்கு பெற்றிருக்கவேண்டும். அறிவியல் பாடநூல்களே பன்றிப் பிற மூலங்களிலிருந்தும் செய்தி களே அறியும் முறைகளே அறிந்திருத்தல் வேண்டும். அறிவியல்பற்றிய தகவல்களே எங்கெங்குப் பெறலாம் என்பதை அறிந்திருந்தால்தான் இது சாத்தியப்படும் ; சில நூல்களில் காணப்பெறும் தவருன தகவல்களைத் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சில தகவல் மூலங்களை ஈண்டுக் கூறுவோம். அறிவியல் கழகங்கள் : சில இடங்களில் அறிவியல் கழகங்கள் இருக்கலாம். அக்கழக உறுப்பினர்களிடம் தொடர்புகொண்டிருந்தால் பல செய்திகளே அறிதல்கூடும். அடிக்கடி அக்கழகங்களில் கூட்டங்கள் நடைபெறக்கூடும். ஒரு திட்டப்படி சுற்றுலாக்கள் செல்லக்கூடும் ; ஆண்டு மலர்கள் வெளியிடக்கூடும் வெளியிலிருந்து பல அறிஞர்கள் வந்து சொற்பொழிவுகள் நி க ழ் த் த வு ம் கூடும். ஆசிரியர் விழிப்புடனிருந்து அவற்றில் கலந்துகொண்டால், பல தகவல்களே அறிந்துகொள்ள வசதி ஏற்படும். மக்கள் தொடர்பு : கழக உறுப்பினர்களைத் தவிர பிறருடன் கொள்ளும் தொடர்பும் அறிவியல் ஆசிரியர்களுக்கு நலம் பயக்கக்கூடும். எல்லா இடங்களிலும் உள்நாட்டுக் கைத்தொழில்கள், கிலவியல்பற்றிய தகவல்கள், தாவர இயல், உயிரியல் ஆகியவற்றை நன்கு அறிந்தவர் கள் இருக்கத்தான் செய்வார்கள். பிறரிடம் செய்திகளே அறிந்து கொள்வதில் ஆசிரியர் தயங்கக்கூடாது. தாம் எவ்வளவு அறிந்தவராக இருந்தாலும் அடக்கம் வேண்டும். பிறரிடம் தகவல்களே அறிந்து கொள்ளுங்கால், - உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்ருர் கடையரே கல்லா தவர்.” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கை கினேவிலிருத்திக் கொண்டால் பெரும்பயன் விளேயும். தம்முடைய மாளுக்கர்களிட மிருந்தே உள்ளுர்ச் செய்திகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம் என்பதை ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தால் கன்று. நூலகங்கள் : நூலகங்களிலிருந்தும் பல அரிய தகவல்களே அறிந்து கொள்ளலாம். சிற்றுார்களிலுள்ள நூலகங்களிலிருப்பதை விடப் பட்டினங்களிலுள்ள நூலகங்களில் பல அரிய நூல்கள் இருக்கக் கடும்.பல்வேறுவெளியீடுகள், பருவ வெளியீடுகள் முதலியவை அங்குக் கிடைக்கும். இந்தி நூலகங்களிலிருந்து நூல்கள் முதலியவற்றைப் 1. நன்னூல்-நூற்பா : 26. 2. குறள்-395