பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அறிவியலில் அளவியல் தேர்வுகளைக் குறை கூருதவர்களே இல்லே அதுபோலவே அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளாதவர்களும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பள்ளிகள், ஆசிரியர்கள், மானுக்கர்கள், பெற்ருேர்கள் ஆகிய நான்கு பகுதியினர் தத்தமக் கேற்றவாறு தேர்வுகளில் அக்கறை காட்டுகின்றனர். மாளுக்கர்கள் தேர்வுகளுக் காகப் படிப்பதிலும் தேர்வுகளே எழுதுவதிலும் அதிகக் காலத்தைச் செலவிடுகின்றனர். பள்ளிகள் தேர்வுகளே ஆயத்தம் செய்வதிலும் அவற்றை நடைமுறையில் கையாள்வதிலும் அதிகக் காலத்தையும் பணத்தையும் செலவிடுகின்றன. ஆசிரியர்களும் விளுத்தாள்க&ள ஆயத்தம் செய்தல், விடைத்தாள்களே மதிப்பிடுதல் போன்ற வேலேகளில் அதிகக் காலத்தைச் செலவிடுகின்றனர். பெற்ருேர்களும் மாளுக்கர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிக மதிப்பு தருகின்றனர். தேர்வுகளின் பயன்கள் : பொதுவாகப் பள்ளிகளில் நடத்தப் பெறும் தேர்வுகளினால் மூவகைப் பயன்களே எய்தலாம். (1) மாளுக்கர்கட்குக் கற்பிக்கப்பெறும் பாடப் பகுதிகளில் அவர்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அறிதல். இது அளத்தல் பயன். (2) மாளுக்கர் எவ்வெப் பகுதிகளே நன்கு கற்றுள்ளனர் ? எவற்றை நன்கு புரிந்து கொள்ளவில்லை ? தம் அறிவைப் புதிய துறைகளில் எவ்வாறு பொருத்திப் பார்க்கின்றனர் ? என்பன போன்ற தகவல்களே அறிதல். இது குறையறி பயன். (3) மாளுக்கர்களின் திறனே அளவிட்டு அ.து அவர்கள் மேற் கொள்ளும் மேற்படிப்புக்கு எவ்வாறு துணைபுரியும் என்பதைத் தீர்மானித்தல். இது முன்னறிதல் பயன். பெரும்பாலும் ஒரு தேர்வைக்கொண்டே மேற் குறிப்பிட்ட எல்லா நோக்கங்களையும் அடையலாம் என்று கருதுகின்றனர். இது தவறு : பெருந்தவறுங் கூட. இன்று ஒவ்வொரு நோக்கத்தையும் எய்து வதற்குத் தனித்தனிச் சோதனைகளையும், அவற்றை ஆயத்தம் செய்யும்