பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அறிவியலும் பிற பாடங்களும் அநுபவமே கல்வி : குழந்தை கல்வி பெறுவதென்பது முன்னேர் திரட்டி வைத்துள்ள பட்டறிவை அக்குழந்தை தெரிந்து கொள்வதுதான் என்று உளவியலார்களும் கல்வி அறிஞர்களும் கூறுகின்றனர்.” அங்ங்னமாயின் அறிவில் - வழிவழியாகத் திரட்டப்பெற்றுள்ள பட்டறிவில் - பிரிவினை இல்லே ; தனித் தனிப் பகுதிகள் இல்லே. மனிதன் தன் அறிவுக்கேற்றவாறும் ஆர்வத்திற்கேற்றவாறும் நன்கு உணர்வதற்காகத்தான் அது பாகுபாடு செய்யப்பெற்றுள்ளது ; பள்ளிகளிலும் நடைமுறையில் கற்பிப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டுதான் அவ்வாறு பி ரி வி னே செய்யப்பெற்றுள்ளது. பயிற்றலில் பாடத்திட்டம் தான் முக்கியம் என்று கருதப்பெற்ற காலத்தில் அவை தனித்தனியாக, சிறிதும் தொடர்பின்றிக் கற்பிக்கப் பெற்றன. அக்காலத்தில் அத்தகைய மனப்பான்மையாலும், நடை முறையில் நேரிட்ட பிற காரணங்களாலும் எல்லாப் பாடங்களும் தொடர்பற்ற நிலையில் இலங்கின ஒன்ருேடொன்று சிறிதும் பொருந்தாத நிலையில் பயிற்றவும் பெற்றன. குழந்தையை மையமாக வைத்துதான் கல்வி அமைய வேண்டும் என்று அறிஞர்கள் உணர்த்திய பிறகு கற்பித்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பயிற்றலில் குழந்தைதான் முக்கியம் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து கற்பிக் கின்றனர். என்ருலும், நடைமுறையில் கேரிடும் பல காரணங்களால், பள்ளிச் சூழ்நிலைகளால், ஆசிரியர்கள் இவ்வுண்மையை மறந்து விடுகின்றனர். இதல்ைதான் கல்வி அறிஞர்கள் பொருத்திப் பயிற்றலே அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். பொருத்திப் பயிற்றல் : பொருத்திப் பயிற்றலே மூன்று விதமாக மேற்கொள்ளலாம் என்று கல்வியறிஞர்கள் கூறுகின்றனர். அவை : (1) ஒரு பாடத்திற்குள்ளேயே பல பகுதிக்ளே இணைத்துக் கற்பித்தல் : (2) ஒரு பாடத்தைப் பிற பாடங்களுடன் தொடர்புபடுத்திக் கற்பித்தல் : {3) பாடத்தை வாழ்க்கையுடன் பொருத்திக் கற்பித்தல். இம்மூன்று முறைகள் எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும் அறிவியலுக்கு கன்கு பொருந்தும். பாடங்களைத் தொடர்பின்றிக் கற்பித்தால் 1 Education is the sharing of racial experience.