பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? §4. - அறிவியல் பயிற்றும் முறை நூல்கள் முதலியவற்றைப் படிக்குமாறு மாளுக்கர்களே ஏவலாம். கேட்டவற்றை மனத்தில் பதிய வைக்குங்கால், வாய்மொழி வினுக்கள், கட்டுரை வரைதல், கரும்பலகைச் சுருக்கம் முதலியவை நன்கு பயன் படும். - ஒவ்வொரு வானொலிப் பாடத்திலும் கிறைந்த பயனைப் பிழிந் தெடுத்தல் ஆசிரியரின் கடமை. கேட்கும் மாளுக்கர் கேட்டவற்றைப் பல்வேறு முறைகளில் சிந்திக்கும் வாய்ப்புகளே அளித்தால் வானெலிப் பாடம் சிறந்த பயனை விளைவிக்கும். - - 7. பிம்பம் வீழ்த்து கருவிகள் : நழுவங்கள், படச்சுருள்கள் முதலியவற்றிலுள்ள படங்களேத் திரையில் விழச் செய்வதற்குப் பல்வேறு கருவிகள் உள. அவற்றுள் படம்பெருக்கி, எபிஸ்கோப்பு, எபிடயாஸ் கோப்பு, பிலிம்ஸ்டிரிப் புரொஜெக்டர், மைக்ரோ புரொஜெக்டர் ஆகிய கருவிகள் அசையாப் படங்களேத் திரையில் வீழ்த் தவும், பிலிம் புரொஜெக்டர் அசையும் படங்களைத் திரையில் வீழ்த்த வும் பயன்படுகின்றன. ஃபிலிம் புரொஜெக்டரில் கிழற் படங்களையும் காட்டலாம் ; ஒலிப்படங்களேயும் காட்டலாம். இக்கருவிகள் யாவும் அறிவியல் துறையில் பல்வேறு பகுதிகளேத் திறனுடன் கற்பிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. அக்கருவிகள் ஒவ்வொன்றையும்பற்றி ஒரு சில குறிப்புகளை ஈண்டுத் தருவோம். படம் பெருக்கி : பிம்பம் வீழ்த்து கருவிகளில் முதன் முதலாகத் தோன்றியது இது. இதைப்பற்றி ஆசிரியர்கள் கன்கு அறிந்திருப்பார் கள். பிரிட்டிஷ் படம் பெருக்கியில் 3;"> 34 அளவுள்ள நழுவங்களும், அமெரிக்கப் படம் பெருக்கியில் 3; x4;” அளவுள்ள கழுவங்களும் (Side) வைக்கப்பெற்றுப் படங்கள் காட்டப்பெறும். இக்கருவியை இயக்குவது எளிது அடிக்கடி பழுதாகித் தொல்லேகளே விளேவிக்காது. அதிக வாட் - பல்புகே ’க் கொண்டு தெளிவான பிம்பங்களே உண்டாக்கிக் கொள்ளலாம். பெருங்கூட்டத்திற்கும் படங்கள் காட்டு வதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆல்ை, இதில் வைக்கப் பெறும் கழுவங்களின் விலே அதிகம்; பளுவானவை எளிதில் உடையக் கூடியவை. அதிக விலே கருதி பல கழுவங்களே வாங்க முடிகின்ற தில்லை ; பழைய நழுவங்களேயும் மாற்ற முடிவதில்லே. பெரிய கூட்டத் திற்குக் காட்டுவதற்கு வசதியாகவுள்ள இக்கருவியை இன்று அதிக மாகப் பயன்படுத்துவதில்லே. இன்று .பிலிம் ஸ்டிரிப் புரொஜெக்டர்’ என்ற கருவி இதன் இடத்தைப் பெற்றுள்ளது. ஃபிலிம் ஸ்டிரிப் புரொஜெக்டர் : பள்ளிகளிள் வகுப்பறைகளில் அசையாப் படங்களேக் காட்டுவதற்கு இக்கருவி இன்று அதிகமாகப் பயன்படுத்தப்பெறுகின்றது. இக்கருவியை இயக்குவது எளிது : கனமும் குறைவு : விலேயும் அதிகம் இல்லே ஒரு சில நிமிடங்களில் படங்கள் காட்டுவதற்கு இதனே ஆயத்தப்படுத்தி விடலாம். இன்று