பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

எழு பெரு வள்ளல்கள்

அந்தக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடல்கள் யாவும் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை யெல்லாம் பிற்காலத்தில் வந்த மன்னர்கள், புலவர்களைக் கொண்டு சேர்த்து ஒழுங்குபடுத்தச் செய்தார்கள். புலவர்கள் தொகுத்ததளால் அந்தப் பாடல்களின் கூட்டத்தைத் தொகை என்று சொன்னர்கள். பாட்டின் வகையைக் கொண்டும், பொருளைக் கொண்டும், அளவைக் கொண்டும் சில சில நூல்களாகப் பிரித்தார்கள். அவற்றில் பத்துப்பாட்டு என்பது ஒன்று. அந்தத் தொகை நூலில் பத்து நீண்ட பாடல்கள் இருக்கின்றன. அதனோடு எட்டு வேறு நூல்கள் உள்ளன. அவற்றை எட்டுத் தொகை என்பார்கள். ஒவ்வொரு தொகையும் பல பாடல்கள் சேர்ந்த தொகுதி. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டும் எட்டுத்தொகையாகும்.

அந்த நூல்களில் நூற்றுக்கணக்கான புலவர்களின் பாடல்கள் இருக்கின்றன. எத்தனையோ கொடையாளிகளின் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. பல மன்னர்கள், வீரர்கள், பெரியவர்கள் முதலியவர்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கொடையாளிகள் பலரைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். யாவருமே வள்ளல்களானலும் அவர்களுக்குள் ஏழு பேரை மிகச் சிறந்த வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிருர்கள். அதனால் ஏழு வள்ளல்கள். என்று ஒரு கணக்கே ஏற்பட்டுவிட்டது.

பாரி, பேகன், அதிகமான், காரி, ஓரி, ஆய், நள்ளி என்ற ஏழு பேர்களையும் எழு பெரு வள்ளல்கள் என்று