பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அறிவியல் பயிற்றும் முறை ஒரு புதிய இரும்புத் தகட்டை உற்றுநோக்கிப் பரிசோதித்தால், அதன் மேற்புறத்தில் பளபளப்பான வரிகளேயும் இரேகைகளேயும் காணலாம். ஏதாவது ஒரு கூர்மையான உளி அல்லது ஆணியால் மேற்புறத்தைச் சுரண்டினல், வேருேர் உலோக தளத்தைக் காணலாம். இவ்வாறு சுரண்டப்பட்ட துண்டிலுள்ள புதிய உலோக தளத்தை வகுப்பிலுள்ளவர்கள் அனேவரும் காணச்செய்தல் வேண்டும். ஏனெனில், அதில் பிரச்சினேக்குரிய விடைக்குறிப்புப் புலணுதல் கூடும், இப்பிரச்சினேயில் எழுப்பிய வினுக்களே இவ்வாறு ஆராயலாம் : யாராவது ஒரு மாளுக்கனேக் கட்டடம் கட்டும் பொறியியலாரிடம் அனுப்பி, வண்ணம் பூசுவதால் இரும்புத் தகடு நீடித்து கிற்குமா என அறிந்து வருமாறு செய்தல் வேண்டும். இதைப் பள்ளி நேரத்தில் செய்ய இயலகது. வேறு நேரத்தில்தான் அவ்வேலையை நிறைவேற்றல் வேண்டும். அவ்வகுப்பிலேயே வேறு ஒரு மாணுக்கன், வண்ணம் பூசிய தகட்டாலும் வண்ணம் பூசாத தகட்டாலும் ஒரே காலத்தில் வேயப்பெற்ற இரண்டு கூரைகளே அறிந்திருக்கலாம். அவனே, எது முதலில் கெட்டுப்போகின்றது என்பதற்குச் சான்று யாதேனும் கிடைக்குமா என்பதை அறிந்து வருமாறு ஏவலாம். வெவ்வேறு தட்ப வெப்ப இடங்களிலுள்ள கூரைகளேப்பற்றி அறிந்திருக்கும் மாணுக்கன் இருந்தால் அவனுடைய கருத்தினேக் கூறுமாறு வினவலாம். அப்படியிருக்கும் மாணுக்கனக் காண்பது அரிது. எனவே, மேலுள்ள துவாரத்தின் வழியாக நீரொழுக்குள்ள கூரையிருந்தால், அதில் துருப்பிடித்தல் விரைவாக நடைபெறுகின்றதா என்று பார்த்து வரும்படி ஏவலாம். அப்படிக் காண வசதிகள் இராவிட்டால், இரும்புத் தகட்டிலிருந்து வெட்டியெடுக்கப்பெற்ற சில துண்டுகளே ஈரமான கிலேயிலும், உலர்ந்த கிலேயிலும் வைத்திருந்து, துருப்பிடித்தலால் அவற்றில் யாதேனும் மாற்றம் காணப்பெறுகின்றதா என்று சிந்திக்கத் துண்டலாம். இவ்வாறு சோதனைகளேச் செய்வதில் மாணுக்கர்கள் துரண்டப்பெறல் வேண்டும். மூன்று இரும்புத் தகட்டுத் துண்டுகளே எடுத்து, அவற்றுள் ஒன்றை சுரண்டியும், மற்ருென்றில் வண்ணம் பூசியும், பிறிதொன்றை ஒன்றும் செய்யாமலும் ருேள்ள மூன்று சோதனைக் குழாய்களில் போட்டு வைக்கச் செய்தல் வேண்டும். ஏற்கெனவே மாணுக்கர்கள், கொதிக்க வைப்பதால் நீரில் கரைந்துள்ள காற்று வெளியேறும் என்பதை அறிந்திருந்தால் அதைத் திரும்ப நினைவூட்டி, வேறு மூன்று துண்டுகளேக் கொதிக்க வைத்த நீரில் போடச் செய்ய வேண்டும். இந்த ஆறு குழாய்கள் மீதும் பெயர்கள் ஒட்டி அப்படியே ஒரிடத்தில் வைக்கச் செய்தல் வேண்டும். இரும்புத் தகட்டைத் தவிர வேறு எந்த உலோகத் தகடுகளாவது கூரை வேயப் பயன்படுத்தப் பெறுகின்றனவா என்று வினவலாம்.