பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$46 அறிவியல் பயிற்றும் முறை: .--ഹഫ05:16, 10 பெப்ரவரி 2016 (UTC) பல்வேறு நிறங்கள், பள்ளித் தோட்டத்திலுள்ள செடிகளைப் பீடிக்கும் நோய்கள், பூச்சிகள், களைகள், வேறிடங்களிலிருந்து வரும் பறவைகள் அங்கு கூடுகட்டி வாழ வருகின்றனவா அன்றி உணவின் பொருட்டா என்பனபோன்ற தகவல்கள் முதலியவற்றையெல்லாம் கவனிக்கத் துண்டலாம். - . . . வெப்பநிலைமாணிகளைக்கொண்டு அன்ருடத் தட்பவெப்ப நிலைகளே அறிதல், காற்றுத் திசைகாட்டிகளைக்கொண்டு காற்று வீசும் திசை களேயறிதல், பாரமானியைக் கொண்டு வாயு மண்டலத்தின் ஈரப்பதத்தை அறிதல், மழை மானியைக் கொண்டு மழையை அளத்தல் முதலிய செயல்களில் மாளுக்கர்களே ஈடுபடுத்தலாம். மழை பெய்தலேயொட்டி முளேக்கும் பல்வேறு விதைகள், தாவரங்கள், மண் புழுக்களின் வேலைகள், மரவட்டைகள் தோன்றுதல், தவளே களின் இரைச்சல், வானவில் தோன்றி மறைதல், சந்திரன் தோன்றி மறைதல், சந்திரப் பிறைகள் தோன்றுதல் முதலிய நிகழ்ச்சிகளே யெல்லாம் ஊன்றி நோக்குமாறு துரண்டலாம். இவ்வாறு கவனித்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் திங்கள் வாரியாக அட்டவணைகளாகத் தொகுத்து இயற்கைப் பஞ்சாங்கம் அமைக்கச் செய்யலாம். இத்தகைய பஞ்சாங்கம் அமைக்கும் வேலேயை விருப்ப வேலையாக்க வேண்டுமேயன்றி வலந்து திணித்து பளுவான வேலேபோலாக்கக் கூடாது. r பஞ்சாங்க வேலையை மேற்கொள்ளும் முறை : பள்ளிகளில் இரண்டு விதமாக இவ்வேலையை மேற்கொள்ளச் செய்யலாம். ஒன்று : சில வட்டாரங்களில் இலேயுதிர் மரங்கள், மரங்கள் பூக்கும் பருவம் முதலிய வற்றைக் குறித்து வரச் செய்யலாம். இரண்டு : ஆசிரியரே பறவை கள் பிரிந்து செல்லும் பருவம், களே தோன்றுங்காலம், தாவரங்கள் பூத்தல் முதலியவற்றைப்பற்றிய குறிப்புகளேத் தந்து சில பறவை. கள், சில களேகள், சில தாவரங்கள் ஆகியவற்றைக் குறித்து வரச் செய்யலாம். - இவ்வேலையை மேற்கொள்ளச் செய்யும் ஆசிரியரே ஒரு பஞ்சாங்கத்தை உருவாக்கியிருத்தல் வேண்டும். மேற்கூறியவை. பற்றிய செய்திகளே ஆசிரியரே நேரில் கண்டிருந்தால்தான் மாணுக்கர் களிடம் அவற்றை வலியுறுத்திச் சொல்ல முடியும். தவிர, அவர் உருவாக்கும் பஞ்சாங்கம் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகவும் இருத்தல் வேண்டும். இவ்வேலையை முதன் முதலாக ஒரு வகுப்பில் ஒரு சில நிறைமதி மாளுக்கர்களேக்கொண்டு செய்யச் செய்தல்வேண்டும். தாமாக முன்வருபவர்களிடம் இவ்வேலையை முதலில் ஒப்படைத்தல், வேண்டும். பிறகு அதே வகுப்பில் வேறு பிரிவுகளிலும் இவ்வேலையைத் தொடங்கலாம்.