பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 அறிவியல் பயிற்றும் முறை தோறும் வெளி வந்துகொண்டுமுள்ளன. அவற்றிலிருந்து மானுக்கர் வாழும் இடத்திற்கும் அவர்களின் அறிவு கிலேக்கும் ஏற்ற நூல்களைத் தேர்ந்து எடுத்தல் வேண்டும். கல்ல நூலின் இயல்புகள் : அடியிற் குறிப்பிட்டுள்ளனவற்றை நல்ல அறிவியல் பாடநூலின் சிறப்பியல்புகளாகக் கொள்ளலாம். அவற்றை மனத்திற்கொண்டு ஆசிரியர்கள் பாடநூல்களேத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். - புறத் தோற்றம் : கல்லதாள், சிறந்த அச்சு, உயர்ந்த கட்டடம், கையாள்வதற்கேற்ற அளவு - முதலிய கூறுகள் நூலின் புறத் தோற்றத்தைக் கவர்ச்சியுடையதாகக் காட்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக் கிணங்க புறத் தோற்றமும் அகத்தோற்றத்தை ஒரளவு எடுத்துக்காட்டவும் கூடும். இந்தக் கூறுகளில் கருத்தினைச் செலுத்தி வெளியிடுவோர் நூலிற்கு இன்றியமையாதனவாகவுள்ள பிற கூறுகளிலும் கவனம் செலுத்தி யிருப்பர் என்று நம்புவதற்கு இடம் உண்டு. எல்லாக் கூறுகளிலும் சிறந்து விலையும் மலிவாக இருந்தால், அதைச் சிறந்த பாடநூலாகக் கொள்ளலாம். அகத் தோற்றம் : பொருளமைப்பு, கையாளப்பெற்றுள்ள மொழி, கடை, விளக்கப் படங்கள், சோதனைகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சிகள் முதலியவற்றை நூலின் அகத்தோற்றக் கூறுகளாகக் கொள்ளலாம். படிப்பும் பட்டறிவும் மிக்க ஆசிரியர்களால் நூல்கள் எழுதப்பெற்ருல் அவை நன்முறையில் அமையும். அவர்கள் நல்ல உளவியலறிவு பெற்றவர்களாக இருந்தால், அல்லது நூல்கள் எழுதும் பொழுது உளவியலறிஞர்களைத் துணையாகக்கொண்டால் நூல் இன்னும் சிறக்கும். நூலே எழுதத் தொடங்குவதற்குமுன் எல்லா நிலை வகுப்புகளுக்குரிய பாடத்திட்டங்களே நன்கு ஆராய்ந்து அறிவியல் பயிற்றுவதன் நோக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு நூல் எழுதும் வேலேயில் இறங்கவேண்டும். மொழியறிவு நல்லமுறையில் வாய்க்கப் பெருதவர்கள் படிப்பும் பட்டறிவும் மிக்க மொழியாசிரியர்களின் து&ணயை மேற்கொள்ளலாம். பொருளமைப்பு : நூல்கள் கம் நாட்டுப் பள்ளிச் சூழ்நிலைக் கேற்றவாறும் நம் சிருர்களின் மனப்பான்மை, கவர்ச்சி, செயல்முறை ஆகியவற்றை யொட்டியும் அமைதல் வேண்டும். பாடத்திட்டங்களே ஆராய்ந்தபிறகு எழுதினால் மாணக்கர்களின் அறிவுகிலேக் கேற்றவாறு நூல்கள் அமையும். ஒரே பொருளின் தலைப்பு பல வகுப்புகளின் பாடத்திட்டங்களிலும் காணப்பெறும். அதுபற்றிய செய்திகளே எந்தெந்த அளவு எந்தெந்த வகுப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொண்டு எழுதுதல்வேண்டும். இதில் மாளுக்கரின் அறிவுகிலே, புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை