பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 அறிவியல் பயிற்றும் முறை -ഷൂ உயர்ங்கிலப்பள்ளியாசிரியர்களிடம் கலந்து பேசி சில அடிப்படைக் கருத்துகளே அறிதல், (vii) சோதனைகட்கு வேண்டிய பொருள்களில் பெரும்பாலானவற்றைத் தாமாகவே இயற்றிக்கொள்ள முனைதல், (iii) சில சோதனைகளை மாளுக்கர்களேயே செய்யும்படி ஏவுதல், (ix) எளிமையாகவுள்ள பகுதிகளே முதலில் கற்பிக்க முயலுதல், (x) அறிவியல் பாடநூல்களைத் தொடர்ந்து வெளிவரும் கையேடு களேயும் பயன்படுத்துதல் போன்றவற்றை சிறந்த கருத்தேற்றங் களாகக்கொண்டு செயலாற்றினல் கற்பித்தலில் வெற்றி நோக்கிய பாதையில் செல்லலாம். . - . சோதனைகளைச் செய்துகாட்டிய பிறகு அறிவியல் ஆசிரியர்கள் பல செயல்களைக் கவனிக்கவேண்டும். கண்ணுடிக் கலங்களைக் கழுவுதல், பாதரசத்தைக் கழுவுதல், பாதரசத்தில் காற்றுக் குமிழிகளே அகற்றுதல், உயிரியல் பொருள்களைச் சேகரஞ் செய்தல், தெளிவான சுண்ணும்பு நீரினத் தயாரித்தல், மின்முலாம் பூசும் கரைசல்களைத் தயாரித்தல், மின்சேமக்கலக் கரைசல்களேத் தயாரித்தல், பற்ருசு வைத்து இணைத்தல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இவற்றிற்கு ஏற்ற நடைமுறைக் குறிப்புகளே உரிய நூல்களில் கண்டு கொள்க.“ - - பயிற்சி : ஒரு சிலரிடம் ஆசிரியர்களுக்கு அமையவேண்டிய பண்புகள், திறன்கள் யாவும் பிறப்பிலேயே அமைந்துள்ளன. இங்கனம் கருவிலே திருவுடையார் எத்தனைப் பேர் இருக்க முடியும் ? எனவே, தக்க சூழ்நிலையில் பெரும்பாலோர்க்கு நல்லதொரு பயிற்சியை அளித்து அவர்களேச் சிறந்த ஆசிரியர்களாக்கவேண்டும். மழுங்கிய கத்தியையும் சாணேயால் கூரியதாக்க முடியுமல்லவா ? கத்தி உயர்ந்தரக எ.கினல் செய்யப்பட்டால் மட்டிலும் போதாது ; கூரியதாகவும் இருக்க வேண்டும். நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள். யாவருமே சிறந்த ஆசிரியர்களாக முடியாது. கற்றல் வேறு: கற்பிக்கும் திறன் வேறு. கற்பிக்கும் திறன்களைப் பயிற்சிக் கல்லூரிகள்தாம். ஆசிரியர்களிடம் அமையச் செய்தல் வேண்டும். குறிக்கோள்கள்’ இல்லாத பயிற்சிக் கல்லூரிகளால் யாது பயன் பயிற்சிக் கல்லூரி களில் அறிவியல் ஆசிரியர்களிடம் அறிவியல் மனப்பான்மையை உண்டாக்கி, அதை வளர்க்கவேண்டும். கற்பித்தல் துறையில் உற்சாகத்தை ஊட்டிக் கிளர்ந்தெழச் செய்தல் வேண்டும். ஆசிரியர் என்றும் மாளுக்களுகவே இருந்து புதிய செய்திகளே அறிந்த நிலையிலிருக்கவேண்டும். கல்வி கரையில. அதுவும், அறிவியல் துறை நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும்பொழுது அதன் எல்லேக்கு அளவு ஏது ? 1. மினெஸ்கோ : அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல், பக். 8, 9, 2. ஷெ நூல் -பக். 296-312.