பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii போக்கில் எஞ்சிய நான்கு ஆழ்வார்களையும் அறிமுகப் படுத்திவைத்துள்ளார். பெரியாழ்வார், நம்மாழ்வார், மதுர கவிகள், திருமங்கையாழ்வார் இவர்கள் பற்றித் தனி நூல்கள் உருவாகி விட்டு சித்தன் விரித்த தமிழ் மட்டிலும் வெளிவந்துள்ளது. சடகோபன் செந்தமிழ் கலியன் குரல் விரைவில் வெளிவரும்! மாலை வழங்கிய மாண்டார் கவிஞருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு மு. இராமசாமி நான் பிறந்த வட்டமாகிய துறையூர் வட்டத்தைச் சேர்ந்தவர். ஜந்தாண்டுகள் திருவையாற்றில் திரு பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்களின் அருமை மாணாக்கராகத் திகழ்ந்து 1946இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் (முதல் வகுப்பு) பட்டம் பெற்று 1947இல் சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்று வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து மாணவர்கள் மதிப்பீட்டில் நல்லாசிரியராகவும், தோழ ஆசிரியர்களிடையே நல்ல நண்பராகவும், பெற்றோர்கள் பொதுமக்கள் மதிப்பீட்டில் மதிப்பும் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்து 35 ஆண்டுகள் நற்பணியாற்றி நற்புகழ் ஈட்டி 1974-1975 ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றவர்; 1979 முதல் சில ஆண்டுகள் துணைத் தலைமையாசிரியராகவும் பணியாற்றி 1983இல் ஒய்வும் பெற்றார். மாணவர்கள்பால் பேரன்பு கொண்டவர்; ஏழை மாணவர்கட்குப் பெரிதும் உதவியவர். இவர் பணிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் (1964-66) விடுப்புடன் காரைக்குடி அழகப்பர் கல்லூரித் தமிழ் ஆய்வுத் துறை இயக்குநர் பெரும் புலவர் தமிழ்க் கடல்', 'சிவம் பெருக்கும் சீலர் ராய், சொக்கலிங்கம் அவர்களின் கீழ் ஆய்வுப் பணி செய்து பெரும் புகழ் பெற்றவர். ராய. சொ. வின் தொடர்பு இவரைப் பல்லாற்றானும் உயர்த்தியுள்ளது என்பது என் கருத்து. பெரியாரைத் துணைக் கோடல்’ என்பதே வள்ளுவத்தில் ஓர் அதிகாரம். இவர் தொடர்பால் இவருடைய புகழும் புலமையும் பெரியோர்களின் தொடர்பும் . மிகுந்திருக்க வேண்டும். (காரைக்குடியில் பத்தாண்டு வாழ்வில் (1950-60) அடியேன் இப்பெரும் புலவரின் நெருங்கிய தொடர்பால் ப்ெற்ற பயன் அளவிடற்கரியது). ராய. சொ. வின் தொடர்பால் தமிழக மெங்கும் சுற்றிப் பார்க்கவும், சிவ, வைணவத் தலங் ஆ-C