பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஆழ்வார்களின் ஆரா அமுது


மான் நமக்கு அளித்திருக்கின்றான்!” என்று ஆனந்தக் கடவில் மூழ்கினார். பிள்ளைப் பருவம்: இத்தெய்வக் குழந்தைக்கு கோதை என்று திருநாமம் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார்கள். இளமையில் கலைகள் முழுதும் தன்னடைவே நிரம்பப் பெற்று வளர்ந்து வந்தாள் கோதையார். ஆழ்வாரைப் போன்றே கோதையாரும் இளமை தொட்டே கண்ணன் பக்தியில் ஈடுபட்டாள். தந்தையாரால் குழந்தையாகக் கருதப்பெற்ற கண்ணன் இவளுக்குக் காதலனாக அமைந்து விடுகின்றான். தக்கவயது எய்தியதும் ஆழ்வாரே குழந்தைக்குப் பஞ்சசம்ஸ்காரங். களைச் செய்து வைத்து பரஞானத்தையும் போதித்தார். கோதை தந்தையாரை அதிகமாக நேசித்து வந்தாள். பெரியாழ்வார். ஆதிகாலையில் துயிலெழுந்து நந்தவனத் துக்குப்புக் ாய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கோதையும் அவருடன் சென்று பூ எடுப்பாள். அவர் அந்த மலர்களைக் கண்டு செண்டு, கண்ணி, தொடையல், பிணையல், இண்டை முதலிய பலவகை மாலைகளைத் தொடுப்பார். அதனை உற்றுக் கவனித்த கோதையும் அவற்றைத் தொடுக்க முயற்சி செய்வாள். ஆழ்வார் தந்தவன கைங்கரியம் செய்து கொண்டிருக்கும்போது 6. பஞ்ச சம்ஸ்காரம்: தாபம், புண்ட்ரம், நாமம், மந்திரம், யாகம் என்ற ஐந்தும் புறச் சுத்தியாக ஆசாரியன் மூலமாகப் பெறுதல், தாபம்-சங்க சக்கரங்களைத் தோளில் சுட்டுத் தரித்துக் கொள்ளல். புண்ட்ரம்மேனோக்கி இட்டுக் கொள்ளும் திருமண்காப்பு அணிதல். நாமம் - இராமாதுசதாசன் என்ற தாஸ்ய நாமம் பெறுதல், மந்திரம் - எட்டெழுத்து மந்திர உபதேசம் பெறுதல். யாகம்-பகவதாசாதனம்: எம்பெருமானை வழிபடுதல்.