பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv களைச் சேவிக்கவும் வாய்ப்புகள் பெற்றவர். ராய.சொ. வின் நூல்களாகிய திருத்தலப் பயணம்', 'வில்லியும் சிவனும்', 'கம்பனும் சிவனும் என்ற மூன்று அரிய நூல்கள் வெளிவரப் பேரளவில் உதவியவர். அவர் தொடர்பால் இவருக்குப் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும், மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வளர்ந்தன என்பது அடியேனின் கணிப்பு. தனியாகப் பயின்று தமிழ் எம். ஏ., பி. எட். பட்டங்களைப் பெற்று உயர்ந்தவர். இப்போது பதினொரு நூல்களின் ஆசிரியர், சிறந்த வைணவர்; ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்டு அவற்றில் தோய்த்தவர். கம்பனில் ஈடுபட்டு இராமகாதையின் ஆழத்தையும் அகலத்தையும் கண்டவர். தமிழகத்தில் நடைபெறும் எல்லாக் கம்பன் விழாக்களிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. ஒல்லும் வகையெல்லாம் இவர் ஆற்றி வரும் தமிழ்ப் பணி போற்றுதற்குரியது. ஒன்று பேச்சால், மற்றொன்று செயலால். ஒராண்டுக் காலம் ஈரோடு தமிழ்ப் பேரவையில் சிந்தாமணி பற்றி தொடர் சொற்பொழிவுகள் ஆற்றி சிந்தாமணிச் செம்மல்" (1963) என்ற_விருதைப் பெற்றவர். இரர்சிபுரம் தெய்வநெறிக் கழகத்தில் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியவர். இப்பணியைப் பாராட்டி, ரிஷிகேசம் வேதாந்தப் பல்கலைக்கழகம் கம்பரா மாயன உபன்யாச ரத்னா (1977) என்ற விருதை வழங்கியுள் ளது. அண்மையில் பண்ணுருட்டி வைணவ சபை இவருக்கு கபூர் வைணவச் செல்வம் (1987) என்ற விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது. கல்கத்தா, பம்பாய்த் தமிழ்ச் சங்கங் களில் இவர் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றி ஆங்கு வாழும் தமிழ் மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திர ரானவர். காஞ்சிகாமகோடி சங்கராச்சாரியரின் ஆசியும் (1979) பெற்றவர். இராசிபுரத்தில் பல இலக்கிய விழாக்கள் நடைபெறக் காரணமாயிருந்து மாணவர்கள்பாலும் இளைஞர்பாலும் மொழி உணர்வையும் நாட்டுப் பற்றை யும் வளர்த்தவர்._ இவர் திருவையாற்றில் பயின்றது முதல் (1941-48) இன்று வரை இவரது பல பணிகளைக் கவனித்தவனாதலால் இவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவன். இதனால் என்னுடன் தம்பி முறையில் பழகும இவருடைய அணிந்துரை இந்நூலுக்குக் கிடைத்தது இந்நூலின் பேறு; என் பேறும் கூடத்தான். நன்முறையில்