பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹 ேே. ஆழியின் கூறாய்த் தோன்றி அழகிய பிள்ளை யாகிப் பாழுது சமயந் தோறும் பல்கலை நூல்கள் ஆய்ந்து வாழுறப் பக்தி யொன்றே வழியெனக் கண்டு கொண்டே ஏழிசை பாடிப் பாடி இறைவனை ஏத்தி நின்றார். கம்மாழ்வார் : 11. திருக்குருகூர்ச் சடகோ பன்சொல் திவ்வியப் பிரபந் தங்கேட் (டு) உருகாத நெஞ்சும் உண்டோ? உலகெலாம் உடைய மூர்த்தி திருப்பேறு வேண்டி வேண்டித் திருவாயின் மொழிகள் யாவும் உருப்போட்டு வந்தாற் போதும் உய்யலாம் ஞாவத் துள்ளே! 12. தாய்முலைப் பாலுண் ணாமல் தானாக வளர்ந்த பிள்ளை பேய்முலைப் பாலை யுண்ட பிள்ளையின் சீர்த்தி போற்றித் தூயநான் மறையின் சாரம் தொகுத்துநற் றமிழில் தந்த ஆயிரம் மீறிப் போன அழகுறு கவிகள் தாமே! மதுரகவியாழ்வார் : 13. உய்யவே சடகோபன்சொல் ஒவ்வொன்றும் போற்றி வாழ்ந்த மையிலார் அடியார்க் கன்பர் மதுரநற் கவியார் அன்பின்