பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi ஒரு திருமாளிகையை அமைத்துக் கொண்டு அதற்கு வேங்கடம் என்ற திருநாமமும் இட்டுக் கொண்டார். மேற் குறிப்பிட்ட மூன்று அர்ச்சாவதாரப் பெருமாள்களிலும் வேங்கடவாணனே இவர்தம் உள்ளத்தை அதிகமாகக் கொள்ளை கொண்டு விட்டான் என்று இதனால் கருத வேண்டியுள்ளது. காஞ்சி வரதராசர் ஏன் இவரை மறந்து விட்டாரோ? தெரியவில்லை! உடையவரின் நியமனப்படி திருமலையில் அனந் தாழ்வான் அக்காலத்தில் ஏரி வெட்டியும் நந்தவனம் அண்மத்தும் கைங்கரியம் செய்ததைப் போல டாக்டர் நாயுடுவும் 1940 வாக்கில் மலேரியா நோய் அதிகமாகப் பிடித்திருந்த திருமலையை நலவாழ்வுக்குகந்ததாகச் செய்து தமது கைங்கரியத்தைப் புனிதமாக்கிக் கொண்டார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்ட ஏழுமலை அப்பனின் திருவுள்ளத்தை யார் தாம் அறிய முடியும்? எம்பெருமான் நம்மாழ்வாரைக் கொண்டு தன்னைப் பாடுவித்துக் கொண்டதுபோல் ஏழுமலையப்பனும் தன் நகரில் உள்ள மலேரியா நோயை இவரைக் கொண்டு ஒழித்துக் கட்டினானோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. இந்த நற்பெயர் தன் அடியானான டாக்டர் நாயுடுவுக்கு வர வேண்டும் என்பது அந்த சீநிவாசனின் திட்டம் போலும்; இந்தக் கைங்கரியத் தால் டாக்டர் நாயுடு உடையவரின் சீடர் அனந்தாழ் வானுடன் வைத்து எண்ணப்படுவாராகின்றார். திருத்தில்லையில் கோவிந்தராசரையும் நடராசரையும் ஏக காலத்தில் சேவிப்போருக்கு சைவ வைணவப் பிணக்கு ஏற்படாது என்பது அடியேனின் கருத்து. அவர்கட்கு அரியும் அரனும் ஒன்று என்ற எண்ணமும் உறுதிப்படும். இங்குப் பணியாற்றிய காரணத்தால்தான் டாக்டர் நாயுடுவின் உள்ளத்தில் இப்பரந்த நோக்கம் உறுதிப் பட்டது போலும்! இவருடைய பல நூல்களில் ஒன்றான க.அரங்கம் முதலான ஆற்றங்கரையினிலே’ என்ற நூலில் சைவ வைணவத்தலுங்களை அற்புதமாகக் காட்டி மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கின்றார். இவர்தம் இலக்கியப் படைப்புகள் சிலவாகவும் சிறியனவாகவும் இருப்பினும் அவற்றுள் அடங்கியுள்ள இவர்தம் பக்திப் பெருக்கு கங்கையாய், கோதாவரியாய், காவிரியாய் விரிந்து கிடப்பதைக் காணலாம். ஏன்? திரிவிக்கிரமன்போல் உயர்ந்தும் காணப்படுவதைக் கண்டு மகிழலாம். .